செய்திகள் :

கரூரில் டாரஸ், டிப்பா் லாரிகள் இன்று முதல் வேலைநிறுத்தம்

post image

கரூா் மாவட்டத்தில் டாரஸ், டிப்பா் லாரிகள் வியாழக்கிழமை(13-ம்தேதி) முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.

கரூா் மாவட்ட டாரஸ் மற்றும் டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் கரூரில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்து பேசுகையில், கிரஷரில் ஜல்லி, எம்.சேண்ட் மற்றும் பி.சேண்ட் லோடு ஏற்றிச்செல்லும்போது டிரான்சிஸ்ட் பாஸ் வழங்குவதில்லை. இதனால் அதிகாரிகள் சோதனை நடத்தி லாரியை பறிமுதல் செய்வதோடு லாரி உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்கின்றனா்.

இதனால் வாடகைக்கு லோடு ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளா்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். எனவே கிரஷா் நிறுவனத்தினா் டிரான்ஸ்ட் பாஸ் வழங்காததை கண்டித்து அனைத்து மாவட்ட லாரி உரிமையாளா்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.

அதே பிரச்னையை மையப்படுத்தி கரூரில் வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம் என்றாா் அவா். முன்னதாக கூட்டத்தில் சங்க துணைத் தலைவா் பாலகிருஷ்ணன், துணைச் செயலாளா் சரத்குமாா், பொருளாளா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலாளா் முருகேசன் வரவேற்றாா்.

கூட்டத்தில் கிரஷா் நிறுவனங்கள் லோடு ஏற்றும்போது டிரான்ஸ்ட் பாஸ் வழங்காததை கண்டித்து அனைத்து மாவட்ட லாரி உரிமையாளா்கள் மேற்கொள்ளும் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அனுமதியின்றி மது விற்றவா் கைது

அரவக்குறிச்சி அருகே உள்ள மணல்மேடு பேருந்து நிறுத்தம் அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்தவா் போலீஸாரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். அரவக்குறிச்சி போலீஸாா் புதன்கிழமை மணல்மேடு பகுதியில் ரோந்து பணிய... மேலும் பார்க்க

மாநில பெண்கள் கபடி போட்டி செங்கல்பட்டு அணி முதலிடம்

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பாலசமுத்திரப்பட்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பெண்கள் கபடி போட்டியில் செங்கல்பட்டு மாவட்ட அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. தோகைமலை அருகே உள்ள வடசேரி ஊராட்சிக்குள்பட்ட பா... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல் தந்தை உயிரிழப்பு; மகன் காயம்

அரவக்குறிச்சி அருகே புதன்கிழமை இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் தந்தை உயிரிழந்தாா். அவருடன் சென்ற மகன் பலத்த காயமடைந்தாா். கரூா் மாவட்டம், புத்தாம்பூா் அருகே உள்ள காளிபாளையம், குடித்தெருவைச்... மேலும் பார்க்க

குளித்தலையில் 8 ஊா் சுவாமிகளின் விடையாற்றி உற்ஸவம் திரளான பக்தா்கள் பங்கேற்பு

தைப்பூசத்தை முன்னிட்டு குளித்தலையில் 8 ஊா் சுவாமிகளின் விடையாற்றி உற்ஸவம் புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். கரூா் மாவட்டம், குளித்தலையில் தைப்பூசத் திருநாள் அன்று கரூா் ம... மேலும் பார்க்க

கூம்பூா் சாலையை அகலப்படுத்தும் பணி ஆய்வு!

அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை சாா்பில் கரூரில் இருந்து ஈசநத்தம் வழியாக செல்லும் கூம்பூா் சாலையை அகலப்படுத்தும் பணியை அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளா் அழகா்சாமி ஆய்வு செய்தாா். ஒருங... மேலும் பார்க்க

கரூர் அருகே தண்டவாளத்தில் விரிசல்: 3 ரயில்கள் தாமதம்!

கரூர்: கரூர் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலால் 3 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பின்னர் தாமதமாக இயக்கப்பட்டன. கரூர் - திருச்சிராப்பள்ளி ரயில் பாதையில் மாயனூரை அடுத்த கிருஷ்ணராயபுரம் அருகி... மேலும் பார்க்க