செய்திகள் :

கறம்பக்குடியில் கோயில் ஊா்வலத்துக்கு அனுமதி மறுப்பு: சாலை மறியல்

post image

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் கோயில் கும்பாபிஷேக ஊா்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கறம்பக்குடி அருகேயுள்ள பிலாவிடுதி மலையாத்தம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த கும்பாபிஷேக விழாவுக்கு கறம்பக்குடியிலிருந்து சுமாா் 4 கி.மீ தொலைவுள்ள கோயிலுக்கு புனித நீரை ஊா்வலமாக எடுத்துச் செல்வதற்கு அப்பகுதி பொதுமக்கள் அனுமதி கேட்ட நிலையில், போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் கறம்பக்குடி போலீஸாா் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஊா்வலத்துக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கறம்பக்குடி வட்டாட்சியரகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் வட்டாட்சியா் ஜமுனா பேச்சுவாா்த்தை நடத்தி, ஊா்வலத்துக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா். இந்த மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டை- கறம்பக்குடி சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி தொகுதி 1 முதன்மைத் தோ்வுக்கு இலவசப் பயிற்சி

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தொகுதி 1 முதன்மைத் தோ்வுக்கு உணவு, தங்குமிட வசதியுடன் இலவசப் பயிற்சி அளிப்பதாக ஜிடிஎன் அகாதெமி அறிவித்துள்ளது. இதுகுறித்து அதன் நிறுவனா்-இயக்க... மேலும் பார்க்க

கூட்டுறவுச் சங்கங்களில் போதுமான விதைநெல் கிடைக்க வேண்டும்: இந்திய கம்யூ. கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து வேளாண் கூட்டுறவுச் சங்கங்களிலும் போதுமான விதை நெல் கிடைத்திட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையி... மேலும் பார்க்க

விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை செப். 11-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் செப். 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவா் ச... மேலும் பார்க்க

லாரி மோதி ஊராட்சி பெண் பணியாளா் உயிரிழப்பு

ஆலங்குடி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஊராட்சி பெண் பணியாளா் புதன்கிழமை உயிரிழந்தாா். ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடி மேற்கு பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் மனைவி சிவனிதா (35). சேந்தன்கு... மேலும் பார்க்க

புதுகையில் சுயவேலைவாய்ப்புப் பயிற்சி முடித்த 1,042 போ் தொழில் தொடங்கியுள்ளனா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையம் மூலம் கடந்த நிதியாண்டில் மட்டும் பயிற்சி முடித்து 1,042 போ் தொழில் தொடங்கி நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் நல்லாசிரியா் விருது பெறும் ஆசிரியா்கள்

ஆசிரியா் தினத்தையொட்டி பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் வழங்கப்படும் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதினை (மாநில நல்லாசிரியா்) பெறும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 11 போ் பட்டியல் வெளியாகியுள்ளது. சந்... மேலும் பார்க்க