செய்திகள் :

காமெடி ஷோ; ஷிண்டேயை துரோகியாக சித்தரித்து பாடல் - மும்பை ஹோட்டலை அடித்து நொறுக்கிய சிவசேனாவினர்

post image

காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வரும் குனால் கம்ரா மும்பையில் நேற்று ஹோட்டல் ஒன்றில் காமெடி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். மும்பை கார்ரோடு பகுதியில் உள்ள யுனிகாண்டினண்டல் ஹோட்டலில் நேற்று இரவு இந்நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்தி பாடல் 'தி தோ பாகல் ஹை' என்ற பாடலை மாற்றி வடிவமைத்து மகாராஷ்டிரா அரசியலை சித்தரிக்கும் வகையில் குனால் கம்ரா பாடினார்.

அதாவது மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை துரோகி என்று சித்தரித்து பாடல் பாடப்பட்டது. இதனை சிவசேனா(உத்தவ்) சஞ்சய் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ வைரலானது. அதனை பார்த்ததும் சிவசேனா(ஷிண்டே) தொண்டர்கள் கொதித்து நிகழ்ச்சி நடந்த ஹோட்டலுக்கு நேற்று இரவு சென்று ஹோட்டலை அடித்து சேதப்படுத்தினர்.

நிகழ்ச்சியை நடத்திய குனால் கம்ராவை உடனே கைது செய்யவேண்டும் என்று ஷிண்டே ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதோடு குனால் கம்ரா மீது புகார் செய்ய கார்ரோடு போலீஸ் நிலையத்தில் நேற்று இரவு ஏராளமான சிவசேனா தொண்டர்கள் கூடி இருந்தனர். சிவசேனா தொண்டர்கள் ஹோட்டலை அடித்து உடைத்ததை ஆதித்ய தாக்கரே கடுமையாக விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஏக்நாத் ஷிண்டே குறித்து குனால் கம்ரா பாடலில் சொன்னது நூறு சதவீதம் உண்மை. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சிவசேனா(ஷிண்டே) எம்.பி.நரேஷ் மஸ்கே வெளியிட்டுள்ள செய்தியில், ``உத்தவ் தாக்கரேயிடம் பணம் வாங்கிக்கொண்டு ஏக்நாத் ஷிண்டே குறித்து குனால் கம்ரா இது போன்று பேசியிருக்கிறார். கம்ரா ஒரு ஒப்பந்த நகைச்சுவை நடிகர். ஆனால் அவர் ஒரு பாம்பின் வாலை மிதித்திருக்கக்கூடாது. பாம்பின் கோரப்பற்கள் வெளியே வந்தால், மோசமான விளைவுகள் ஏற்படும்.

அவர் நாட்டில் சுதந்திரமாக நடமாட முடியாதபடி செய்துவிடுவோம். நாங்கள் உங்களை பின் தொடர்ந்தால் நீங்கள் எந்த நாட்டை விட்டே சென்றுவிடுவீர்கள்" என்று அவர் கூறினார்.

2022ம் ஆண்டு ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.கவின் துணையோடு சிவசேனாவில் இருந்து பிரிந்து வெளியில் வந்து மகாராஷ்டிரா முதல்வரானார். அதோடு சிவசேனாவின் பெயர் மற்றும் சின்னத்தையும் உத்தவ் தாக்கரேயிடமிருந்து பறித்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

64 ஆண்டுகளுக்குப் பிறகுப் பேரப்பிள்ளைகள் நடத்தி வைத்த திருமணம்; நெகிழ வைக்கும் குஜராத் ஜோடி!

64 ஆண்டுகளுக்கு முன்பே குஜராத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி காதலித்து வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து இருக்கிறது.64 ஆண்டுகளுக்கு முன்பு காதல் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. ஆனால் அப்படிப... மேலும் பார்க்க

Life On Boat: வீடு, உடைமைகளை விற்று, பாய்மரப்படகில் குடியேறிய இந்திய குடும்பம்- கனவு நனவானது எப்படி?

கப்பலில் தங்களது முழு நேர வாழ்க்கையும் வாழ்ந்து வருகிறது ஓர் இந்திய குடும்பம். முன்னாள் இந்திய கடற்படை அதிகாரியான கேப்டன் கௌரவ் கௌதம் மற்றும் முன்னாள் ஊடக நிபுணரான அவரது மனைவி வைதேகி மற்றும் இவர்களின்... மேலும் பார்க்க

டிக்கெட் வைத்திருக்கும் அதிர்ஷ்டசாலிக்கு ரூ.50,000 பரிசு வழங்கும் மத்திய ரயில்வே - ஏன் தெரியுமா?

மத்திய ரயில்வே (CR) லக்கி யாத்ரி யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது தினசரி உள்ளூர் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது மத்திய ரயில்வே. இந்த திட்டத்தின் மூலம... மேலும் பார்க்க

மனோஜ் பாரதிராஜா: `என் பக்கத்துல உட்கார்ந்துட்டு பியானோ வாசிச்ச பையன்' - கலங்கும் பியானோ டீச்சர்

வாட்ஸ் அப் குரூப் ஒன்றில், 'மனோஜ் என்னுடைய மாணவன். வெரி நைஸ் பாய்' என்று வருத்தமுடன் பதிவு செய்திருந்தார் ஒரு பெண்மணி. அவர் பெயர் ரதி மாசிலாமணி. அவரைத் தொடர்புகொண்டோம். ''மனோஜ் என்னோட மியூசிக் கிளாஸ்ல... மேலும் பார்க்க

வரதட்சணை கேட்ட கணவர்; போலீஸ் ஸ்டேஷனில் வைத்து துவம்சம் செய்த குத்துச்சண்டை வீராங்கனை; என்ன நடந்தது?

ஹரியானாவைச் சேர்ந்தவர் தீபக் நிவாஸ் ஹோடா. கபடி வீராரான இவர் இந்திய அணிக்காக விளையாடித் தங்கப்பதக்கம் உட்படப் பல்வேறு பதக்கங்களைப் பெற்று தந்துள்ளார்.அர்ஜூனா விருதும் பெற்று இருக்கிறார். அதே மாநிலத்தைச... மேலும் பார்க்க

`மன்னிப்பு கேட்க முடியாது; முட்டாள்தனம்’ - ஷிண்டேவை துரோகி என்று சொல்லிய நடிகர் கம்ரா விளக்கம்

மும்பையில் நேற்று முன் தினம் இரவு நடந்த காமெடி ஷோ படப்பிடிப்பில் காமெடி நடிகர் குனால் கம்ரா மகாராஷ்டிராவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் குறித்து பேசினார். பின்னர் அவர் இந்தி பாடல் ஒன்றை மாற்றி எழுதி, `... மேலும் பார்க்க