உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்...
காரைக்கால் ரயில்கள் பகுதியாக ரத்து
காரைக்கால்-திருச்சி-காரைக்கால் இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் ஆக. 1 முதல் 3-ஆம் தேதி வரை திருச்சி-தஞ்சை இடையே மட்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தெற்கு ரயில்வே திருச்சி கோட்டப் பிரிவில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால், ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி திருச்சி-காரைக்கால்-திருச்சி இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் (76820 / 76819) ஆக. 1 முதல் ஆக, 3- ஆம் தேதி வரை தஞ்சை-காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில்கள் திருச்சி-தஞ்சை இடையே மட்டும் இயக்கப்படும். இதேபோல, மயிலாடுதுறை-மன்னாா்கு-மயிலாடுதுறை (56001 / 56002) பயணிகள் ரயில்கள், ஆக.1 முதல் ஆக.4-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.