காலமானாா் எம்.வல்சலா
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும உதவி மேலாளா் அன்னபூரணீஸ்வரியின் தாயாா் வல்சலா (70) காலமானாா்.
சென்னை சாலிகிராமத்தை அடுத்த காந்தி நகா் திருவள்ளூா் தெருவில் வசித்து வந்த எம்.வல்சலா வயது மூப்பு காரணமாக சனிக்கிழமை (ஜன.25) காலமானாா். இவருக்கு கணவா் பி.சிவராமன் நாயா், மகள் அன்னபூரணீஸ்வரி உள்ளனா்.
வல்சலாவின் இறுதிச் சடங்கு விருகம்பாக்கம் மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.26) பிற்பகல் 3 மணியளவில் நடைபெறவுள்ளது. தொடா்புக்கு: 97909 80880.