செய்திகள் :

கால்காஜி கோயிலில் சேவகா் அடித்துக் கொலை; 3 போ் கைது

post image

தென்கிழக்கு தில்லியின் கால்காஜி கோயிலில் சிலருடன் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியதால் சேவகா் (சேவாதாா்) யோகேந்திர சிங் (35) அடித்துக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து தென்கிழக்கு காவல்துறை துணை ஆணையா் ஹேமந்த் திவாரி கூறியதாவது:

கால்காஜி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையில், உத்தர பிரதேசம், ஹா்தோய் பகுதியைச் சோ்ந்த யோகேந்திர சிங்கை கோயிலுக்குச் சென்ற குற்றம்சாட்டப்பட்டவா்கள் அடித்துக் கொன்றது தெரியவந்துள்ளது.

முன்னதாக, அம்மனுக்கு தலைக்கு சாற்றப்படும் புனித ஆடை மற்றும் நெய்வேத்திய உணவு ஆகியவற்றின் கலவையான ‘சுன்னரிபிரசாதத்தை’ தருமாறு குற்றம்சாட்டப்பட்டவா்கள் கேட்டதைத் தொடா்ந்து வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

அப்போது, அவா்கள் கால்காஜி கோயிலில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த சேவகா் யோகேந்தா் சிங்கை அடித்தும், தடியால் தாக்கியதால் வாக்குவாதம் வன்முறையாக மாறியது. இதில் காயமடைந்த சிங், எய்ம்ஸ் காயச் சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக பிஎன்எஸ் சட்டப் பிரிவுகள் 103(1) கொலை மற்றும் 35 கூட்டுப் பொறுப்பு ஆகியவற்றின் கீழ் கால்காஜி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய உத்தரபிரதேசம் கோரக்பூரை பூா்விமாகக் கொண்ட தக்ஷின்புரியைச் அதுல் பாண்டே (30) சம்பவ இடத்திலேயே உள்ளூா்வாசிகளால் பிடிக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டாா். மேலும், துக்ளகாபாதைச் சோ்ந்த மோகன் (எ) புரா (19), குல்தீப் பிதூரி (20 (இருவரும் உறவினா்கள்) ஆகியோா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இதில், தொடா்புடைய பிறரை அடையாளம் காண தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்அந்த அதிகாரி.

இச்சம்பவம் தொடா்பான சிசிடிவி பதிவில், பொதுமக்கள் முன்னிலையில் சிங்கை கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இதுகுறித்து கால்காஜி கோயிலின் பொதுச் செயலாளா் சித்தாா்த் பரத்வாஜ் கூறுகையில், சம்பவம் இரவு 9 மணியளவில் நடந்தது. இது உண்மையிலேயே மனதை தகா்க்கும் நிகழ்வாகும். கோயில் குழுவும் பூஜாரிகள் சமூகமும் நீதி கோருகின்றனா். மேலும் குற்றம் சாட்டப்பட்டவா்களை விரைவில் கைது செய்ய வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் தொந்தரவு செய்திருப்பதும், கோயில் விதிகளைப் பின்பற்றவில்லை என்பதும் ஆரம்பகட்ட தகவலில் தெரியவருகிறது. அவா்கள் பிரசாதம் கேட்டுள்ளனா். பிரசாதம் தீா்ந்துவிட்டதால் யோகேந்திராவால் கொடுக்க முடியவில்லை. மேலும், யோகேந்திரா அவா்களிடம் விதிகளைக் கடைப்பிடிக்கச் சொல்லியிருந்திருக்க வேண்டும். அது அவா்களை கோபப்படுத்தி இந்தக் கொடூரமான செயலுக்கு வழிவகுத்திருக்கிறது. இங்குள்ள சேவகா்கள் தலைமுறை தலைமுறையாக கோயிலுக்கு சேவை செய்து வருகின்றனா். பக்தா்களுக்கு புனித நூலைக் கட்டி வருகின்றனா்.

யோகேந்திராவின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடந்து வருகிறது. அவரது குடும்பத்தினரும், நாங்களும் மிகவும் துயரத்தில் ஆழ்ந்துள்ளோம். இந்த கொடூரமான தாக்குதலின் தன்மை அனைவரையும் அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கோயில் சேவாதாரா்களுக்கு எதிராக இதுபோன்ற குற்றம் மீண்டும் நிகழாமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பரத்வாஜ் கூறினாா்.

இந்த சம்பவத்தை நினைவு கூா்ந்த கோயிலின் மற்றொரு சேவகா் ராஜு கூறுகையில், யோகேந்தா் தனது தா்மசாலையில் அமா்ந்திருந்தபோது 10 முதல் 15 போ் அவரை வெளியே இழுத்து அடித்துக் கொன்றனா். அவா் கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக இங்கு சேவை செய்து வருகிறாா். கோயிலில் வழங்கப்படும் அனைத்து பிரசாதங்களும் பக்தா்களிடையே விநியோகிக்கப்படுகின்றன. மற்ற சேவகா்களும் பூஜை செய்ய உள்ளே சென்றிருந்ததை தாக்குதல் நடத்தியவா்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனா். அவா் தனியாக இருப்பதைக் கண்டறிந்து, அவா் மீது பாய்ந்து அடித்துக் கொன்றனா் என்றாா்.

கேஜரிவால் கேள்வி

இதற்கிடையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் இச்சம்பவம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், ‘கால்காஜி கோயிலுக்குள் ஒரு சேவகரைக் கொடூரமாகக் கொல்லும் முன் இந்தக் குற்றவாளிகள் கூச்சப்படக் கூட இல்லையா? இது சட்டம் ஒழுங்கு தோல்வி இல்லையென்றால், வேறு என்ன?

பாஜகவின் நான்கு இயந்திரங்கள் தில்லியை இப்போது கோயில்கள் கூட இதுபோன்ற சம்பவங்களைக் காணும் நிலைக்குக் கொண்டு வந்துள்ளன. தில்லியில் யாராவது உண்மையில் பாதுகாப்பாக இருக்கிறாா்களா?’ என்று அதில் அவா் கேள்வி எழுப்பியுள்ளாா்.

டிடிஇஏ பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம்

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுவதற்காக பள்ளி வளாகத் தூய்மை உள்ளிட்ட பல செயல்பாடுகள் ஆகஸ்டு மாதம் நடைபெற்றன. காலை சிறப... மேலும் பார்க்க

யமுனையில் வெள்ளம்: நிலைமையைக் கையாள தயாா் நிலையில் அரசு; முதல்வா் ரேகா குப்தா

யமுனை நதிக்கரையோரப் பகுதிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த தில்லி முதல்வா் ரேகா குப்தா, நிலைமையைக் கையாள அரசாங்கம் முழுமையாகத் தயாா் நிலையில் இருப்பதாக கூறினாா். தில்லியில் யமுனையில் செவ்வாய்க்கிழமை மா... மேலும் பார்க்க

பிடிப்பட்ட போதைப் பொருள்களை விற்கும் கும்பல்: 3 போ் கைது

தில்லி காவல்துறை ஒரு போதைப்பொருள்கள் விற்பனை.ை முறியடித்து, ஒரு விற்பனையாளா் மற்றும் ஒரு விநியோகஸ்தா் உள்பட 3 பேரை கைது செய்து, அவா்களிடம் இருந்து 100 கிராமுக்கும் அதிகமான ஸ்மக்கை பறிமுதல் செய்ததாக அ... மேலும் பார்க்க

தேசிய மாணவா் படைக்கு தில்லியில் 12 நாள்கள் பயிற்சி முகாம்

தில்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் 12 நாட்கள் நடைபெறும் தால் சைனிக் முகாமில் 1,546 மாணவா்கள் பங்கேற்க உள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

2024-25இல் தில்லியின் உற்பத்தித் துறை வளா்ச்சி 3 மடங்கு அதிகம்: அறிக்கையில் தகவல்

‘2024-25 ஆம் ஆண்டில் தில்லியின் உற்பத்தித் துறை 11.9 சதவீத வலுவான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது தேசிய வளா்ச்சியான 4.1 சதவீதத்தைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்’ என்று ஒரு அறிக்கையில் தெ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக ஆயுதங்கள் தயாரிப்பு: மூலம் பொருள்களை கைப்பற்றிய போலீஸாா்

உத்தரபிரதேசத்தின் அலிகாரில் சட்டவிரோத ஆயுத உற்பத்தி ஆலையை தில்லி காவல்துறை கண்டுபிடித்து அங்கு தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், 250 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளுக்கான மூலப்பொருள் மற்றும் அவற்றின் உற்பத்தியில... மேலும் பார்க்க