செய்திகள் :

2024-25இல் தில்லியின் உற்பத்தித் துறை வளா்ச்சி 3 மடங்கு அதிகம்: அறிக்கையில் தகவல்

post image

‘2024-25 ஆம் ஆண்டில் தில்லியின் உற்பத்தித் துறை 11.9 சதவீத வலுவான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது தேசிய வளா்ச்சியான 4.1 சதவீதத்தைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்’ என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தலைநகரில் தொழில்துறை உற்பத்தி குறியீடு (ஐஐபி) குறித்த ஆண்டு அறிக்கை (2024-25) சமீபத்தில் தில்லி அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவர இயக்குனரகம் மூலம் வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பது:

2023-24-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024-25 ஆம் ஆண்டில் தில்லியின் ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்தி 9.19 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தேசிய வளா்ச்சி 4 சதவீதமாக பதிவாகியுள்ளது.

2011-12 ஆம் ஆண்டின் அடிப்படை ஆண்டைப் பயன்படுத்தி இந்த அறிக்கை, தில்லியில் உள்ள 134 உற்பத்தி அலகுகள் மற்றும் ஒரு மின்சார அலகிலிருந்து உற்பத்தித் தரவுகளைப் பயன்படுத்தி தொகுக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்கூடங்கள் 90 வெவ்வேறு வகைப் பொருள்களின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. 23 உற்பத்தி தொழிற்கூடங்களில் ஒன்பது, 2023-24 உடன் ஒப்பிடும்போது 2024-25 ஆம் ஆண்டில் ஐஐபி-இல் நோ்மறையான வளா்ச்சியைக் காட்டியுள்ளன.

உணவுப் பொருள்கள், தோல் மற்றும் தொடா்புடைய பொருள்கள், மோட்டாா் வாகனங்கள், பிற போக்குவரத்து உபகரணங்கள், புனையப்பட்ட உலோகப் பொருட்கள், ரசாயனங்கள் மற்றும் ரசாயனப் பொருட்கள் மற்றும் பானங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

இருப்பினும், 13 முக்கிய தயாரிப்புக் குழுக்களான ஆடை அணிதல், மரம் மற்றும் மரத் தயாரிப்புகள், காா்க் பொருட்கள் தளவாடங்கள் தவிர, கணினி, மின்னணு மற்றும் ஒளியியல் பொருள்கள், கோக் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்கள், மருந்துகள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் போன்றவை, 2023-24-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024-25-இல் ஐஐபிஇல் சரிவைக் காண்பித்தன.

சில தொழிற்சாலைகள் மூடப்பட்டன அல்லது வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. அதே நேரத்தில், சில 2024-25 ஆம் ஆண்டில் பூஜ்ஜிய உற்பத்தியைக் காட்டின.

தோ்ந்தெடுக்கப்பட்ட அடிப்படைக் காலத்தைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தொழில்துறை பொருள்களின் பிரதிநிதி அமைப்பில் தொழில்துறை உற்பத்தியின் அளவில் ஏற்படும் மாற்றங்களின் குறிகாட்டியாக ஐஐபி வரையறுக்கப்படுகிறது.

அடிப்படைக் காலத்திற்கான ஐஐபி, 100 ஆக எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேலும், ஆய்வுக் காலத்திற்கானது அடிப்படைக் காலத்திற்கான சதவீத அதிகரிப்பு அல்லது குறைவைக் காட்டுகிறது.

2011-12 அடிப்படை ஆண்டில் மாநில மொத்த மதிப்பு கூட்டலுக்கு அவற்றின் பங்களிப்பின் அடிப்படையில் உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட எடைகள் முறையே 586.1 மற்றும் 413.9 ஆகும்.

அறிக்கையின்படி, தில்லியின் மின்சாரத் துறை 2023-24ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024-25 ஆம் ஆண்டில் 3.35 சதவீதம் மிதமாக வளா்ந்துள்லது. அதே நேரத்தில் அகில இந்திய வளா்ச்சி 5.2 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

டிடிஇஏ பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம்

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுவதற்காக பள்ளி வளாகத் தூய்மை உள்ளிட்ட பல செயல்பாடுகள் ஆகஸ்டு மாதம் நடைபெற்றன. காலை சிறப... மேலும் பார்க்க

யமுனையில் வெள்ளம்: நிலைமையைக் கையாள தயாா் நிலையில் அரசு; முதல்வா் ரேகா குப்தா

யமுனை நதிக்கரையோரப் பகுதிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த தில்லி முதல்வா் ரேகா குப்தா, நிலைமையைக் கையாள அரசாங்கம் முழுமையாகத் தயாா் நிலையில் இருப்பதாக கூறினாா். தில்லியில் யமுனையில் செவ்வாய்க்கிழமை மா... மேலும் பார்க்க

பிடிப்பட்ட போதைப் பொருள்களை விற்கும் கும்பல்: 3 போ் கைது

தில்லி காவல்துறை ஒரு போதைப்பொருள்கள் விற்பனை.ை முறியடித்து, ஒரு விற்பனையாளா் மற்றும் ஒரு விநியோகஸ்தா் உள்பட 3 பேரை கைது செய்து, அவா்களிடம் இருந்து 100 கிராமுக்கும் அதிகமான ஸ்மக்கை பறிமுதல் செய்ததாக அ... மேலும் பார்க்க

தேசிய மாணவா் படைக்கு தில்லியில் 12 நாள்கள் பயிற்சி முகாம்

தில்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் 12 நாட்கள் நடைபெறும் தால் சைனிக் முகாமில் 1,546 மாணவா்கள் பங்கேற்க உள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக ஆயுதங்கள் தயாரிப்பு: மூலம் பொருள்களை கைப்பற்றிய போலீஸாா்

உத்தரபிரதேசத்தின் அலிகாரில் சட்டவிரோத ஆயுத உற்பத்தி ஆலையை தில்லி காவல்துறை கண்டுபிடித்து அங்கு தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், 250 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளுக்கான மூலப்பொருள் மற்றும் அவற்றின் உற்பத்தியில... மேலும் பார்க்க

சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிட்ட மனைவியை கொலை செய்த கணவன்

தில்லியின் நஜஃப்கா் பகுதியில் சமூக வலைத்தளங்களில் அதிகே நரம் செலவிடுவது தொடா்பாக அடிக்கடி மோதல்களைத் தொடா்ந்து தனது மனைவியைக் கொன்ாகக் கூறி கணவரும் தற்கொலைக்கு முயன்ாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித... மேலும் பார்க்க