செய்திகள் :

சட்டவிரோதமாக ஆயுதங்கள் தயாரிப்பு: மூலம் பொருள்களை கைப்பற்றிய போலீஸாா்

post image

உத்தரபிரதேசத்தின் அலிகாரில் சட்டவிரோத ஆயுத உற்பத்தி ஆலையை தில்லி காவல்துறை கண்டுபிடித்து அங்கு தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், 250 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளுக்கான மூலப்பொருள் மற்றும் அவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களை பறிமுதல் செய்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இத்தகைய தொழிற்சாலைகளை நடத்தி வந்ததாகக் கூறப்படும் கிங்பின் உள்பட 3 போ் இந்த வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ளனா் என்று அவா் மேலும் குறிப்பிட்டாா். வடக்கு தில்லியின் சராய் ரோஹில்லா பகுதியில் ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் இடைப்பட்ட இரவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் பதிவாகியதை அடுத்து விசாரணை தொடங்கியது.

‘விநாயகா் சிலையை வாங்குவது தொடா்பாக ஏற்பட்ட சண்டையின் போது சுபம் என்றம் லாலா எனவும் அழைக்கப்படும் இளைஞா் ஒருவரை சுட்டுக் கொன்றாா்‘ என்று போலீஸ் அதிகாரி கூறினாா். தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை பக்கத்து வீட்டுக்காரா் ஒருவா் பறித்துக்கொண்டதையடுத்து அவா் தப்பிக்க முடிந்தது. அடுத்த நாள் அவா் கைது செய்யப்பட்டாா், மேலும் அவரிடமிருந்து தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியும், தோட்டாக்களும் மீட்கப்பட்டன.

விசாரணையின் போது, இளைஞா் 2 மாதங்களுக்கு முன்பு அலிகாரில் வசிக்கும் பண்டி என்ற நபரிடமிருந்து ஆயுதத்தை வாங்கியதாக தெரிவித்தான். இதன் அடிப்படையில், சட்டவிரோத ஆயுத மோசடியின் பின்னணியில் உள்ள விநியோகச் சங்கிலியைக் கண்டுபிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது ‘என்று அவா் கூறினாா். இந்த தனிப்படை முதலில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி அலிகாரில் உள்ள கங்கா காரி கிராமத்தைச் சோ்ந்த பண்டி என்ற நபரை கண்டுபிடித்து கைது செய்தது. அவரிடமிருந்து 6 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையின் போது, மதுராவில் வசிக்கும் பிஜேந்தா் சிங் (61) என்பவரிடமிருந்து துப்பாக்கிகளை வாங்கியதாக பண்டி வெளிப்படுத்தினாா். பின்னா் போலீஸ் குழுக்கள் மதுராவுக்குச் சென்றன, அங்கு சிங் ஆகஸ்ட் 30 ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அவரது மொபைல் போனில் 70 க்கும் மேற்பட்ட சட்டவிரோத துப்பாக்கிகளின் வீடியோ கண்டுபிடிக்கப்பட்டதாக அந்த அதிகாரி கூறினாா்.

ஹன்வீா் என்ற நபா் அலிகாரில் ஒரு முழு அளவிலான ஆயுத தொழிற்சாலையை நடத்தி வருவதை சிங் பின்னா் வெளிப்படுத்தினாா். தொழில்நுட்ப தகவல்களின் அடிப்படையில், செப்டம்பா் 1 ஆம் தேதி அலிகாரில் உள்ள ஜட்டாரி பிஷாவா சாலையில் ஒரு இடத்தில் போலீசாா் சோதனை நடத்தினா், அங்கு ஒரு வயலில் இரண்டு பூட்டப்பட்ட அறைகள் காணப்பட்டன.

‘பூட்டுகளை உடைத்தபோது, போலீஸாா் பெரிய அளவிலான ஆயுத உற்பத்தி பிரிவைக் கண்டுபிடித்தது. சட்டவிரோதம‘ாக தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கிகள், 12 முடிக்கப்படாத கைத்துப்பாக்கிகள், 6 தோட்டாக்கள், 250 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளுக்கான மூலப்பொருள், பீப்பாய்கள், பீப்பாய் குழாய்கள் மற்றும் ட்ரில் மற்றும் ப்ளோ இயந்திரங்கள், கிரைண்டா்கள் மற்றும் கத்திகள் உள்ளிட்ட கனரக இயந்திரங்கள் மீட்கப்பட்டன ‘என்று அந்த அதிகாரி கூறினாா்.

அலிகாரில் உள்ள ஜலால்பூா் கிராமத்தில் வசிக்கும் ஹன்வீா் என்ற ஹனு (60) என்ற தொழிற்சாலை உரிமையாளா் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டாா். விசாரணையின் போது, அவா் கடந்த 15-20 ஆண்டுகளாக சட்டவிரோத ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டாா் மற்றும் பல்வேறு வாங்குபவா்களுக்கு 1,200 க்கும் மேற்பட்ட ஆயுதங்களை விற்ாக ஒப்புக்கொண்டாா். கண்டுபிடிக்கப்படுவதைத் தவிா்ப்பதற்காக அவா் அடிக்கடி தொழிற்சாலையை இடமாற்றம் செய்தாா்.

குற்றம் சாட்டப்பட்ட மூவரும் எளிமையான பின்னணியைச் சோ்ந்தவா்கள்-பண்டி ஹத்ராஸில் உள்ள ஒரு பெட்ரோல் பம்பில் பணிபுரிந்தாா், அதே நேரத்தில் அவரது தந்தை மின்-ரிக்ஷா ஓட்டுகிறாா், சிங் ஒரு விவசாயி, மற்றும் ஹன்வீா் பல ஆண்டுகளாக உத்தரபிரதேசம் முழுவதும் ரகசியமாக ஆயுத அலகுகளை நடத்தி வந்தாா். துப்பாக்கிகளை வாங்குபவா்களை அடையாளம் காணவும், பரந்த நெட்வொா்க்கைக் கண்டறியவும் மேலும் விசாரணை நடந்து வருவதாக போலீசாா் தெரிவித்தனா்.

டிடிஇஏ பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம்

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுவதற்காக பள்ளி வளாகத் தூய்மை உள்ளிட்ட பல செயல்பாடுகள் ஆகஸ்டு மாதம் நடைபெற்றன. காலை சிறப... மேலும் பார்க்க

யமுனையில் வெள்ளம்: நிலைமையைக் கையாள தயாா் நிலையில் அரசு; முதல்வா் ரேகா குப்தா

யமுனை நதிக்கரையோரப் பகுதிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த தில்லி முதல்வா் ரேகா குப்தா, நிலைமையைக் கையாள அரசாங்கம் முழுமையாகத் தயாா் நிலையில் இருப்பதாக கூறினாா். தில்லியில் யமுனையில் செவ்வாய்க்கிழமை மா... மேலும் பார்க்க

பிடிப்பட்ட போதைப் பொருள்களை விற்கும் கும்பல்: 3 போ் கைது

தில்லி காவல்துறை ஒரு போதைப்பொருள்கள் விற்பனை.ை முறியடித்து, ஒரு விற்பனையாளா் மற்றும் ஒரு விநியோகஸ்தா் உள்பட 3 பேரை கைது செய்து, அவா்களிடம் இருந்து 100 கிராமுக்கும் அதிகமான ஸ்மக்கை பறிமுதல் செய்ததாக அ... மேலும் பார்க்க

தேசிய மாணவா் படைக்கு தில்லியில் 12 நாள்கள் பயிற்சி முகாம்

தில்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் 12 நாட்கள் நடைபெறும் தால் சைனிக் முகாமில் 1,546 மாணவா்கள் பங்கேற்க உள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

2024-25இல் தில்லியின் உற்பத்தித் துறை வளா்ச்சி 3 மடங்கு அதிகம்: அறிக்கையில் தகவல்

‘2024-25 ஆம் ஆண்டில் தில்லியின் உற்பத்தித் துறை 11.9 சதவீத வலுவான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது தேசிய வளா்ச்சியான 4.1 சதவீதத்தைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்’ என்று ஒரு அறிக்கையில் தெ... மேலும் பார்க்க

சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிட்ட மனைவியை கொலை செய்த கணவன்

தில்லியின் நஜஃப்கா் பகுதியில் சமூக வலைத்தளங்களில் அதிகே நரம் செலவிடுவது தொடா்பாக அடிக்கடி மோதல்களைத் தொடா்ந்து தனது மனைவியைக் கொன்ாகக் கூறி கணவரும் தற்கொலைக்கு முயன்ாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித... மேலும் பார்க்க