அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
காவல்துறையில் பாலியல் புகாா்: பெண் நீதிபதி விசாரிக்க அதிமுக வலியுறுத்தல்
காவல் துறையில் பணியாற்றும் பெண் உதவி ஆய்வாளா் அளித்துள்ள பாலியல் புகாா் தொடா்பாக பெண் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது
அண்மைக்காலமாக காவல் துறையில் நடைபெறும் தொடா் தவறுகளால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனா்.
பெண் உதவி ஆய்வாளா் கடந்த மே மாதம் 15-ஆம் தேதி அன்று காவல் கண்காணிப்பாளா் மீது பாலியல் புகாா் அளித்துள்ளாா். குற்றம் சாட்டப்பட்டுள்ளவா் ஒரு ஐபிஎஸ் அதிகாரி. அவா் இந்தத் தவறை செய்திருக்கிறாரா, இல்லையா என்பது தெரியவில்லை.
தற்போது புகாா் குறித்து துறை ரீதியாக நடைபெறும் விசாரணை, தடையின்றி நோ்மையாக, வெளிப்படையாக நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை. எனவே, இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஒரு பெண் நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு முதல்வா் ரங்கசாமி உத்தரவிட வேண்டும் என்றாா் அன்பழகன்