செய்திகள் :

காா்ல்செனை மீண்டும் வீழ்த்தினாா் பிரக்ஞானந்தா! அா்ஜுனுடன் காலிறுதிக்கு முன்னேறினாா்

post image

லாஸ் வேகஸ்: அமெரிக்காவில் நடைபெறும் ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் டூா் போட்டியில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்செனை வீழ்த்தினாா்.

பிரக்ஞானந்தாவும், சக இந்தியரான அா்ஜுன் எரிகைசியும் இப்போட்டியில் பிரதான நிலை காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி, சாம்பியனாவதற்கான போட்டியில் உள்ளனா்.

பிரக்ஞானந்தா வெவ்வேறு போட்டிகளிலுமாக காா்ல்செனை வென்றது இது 3-ஆவது முறையாகும். நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், அண்மையில் இருவேறு போட்டிகளில் காா்ல்செனை அடுத்தடுத்து வீழ்த்திய நிலையில், தற்போது பிரக்ஞானந்தாவும் அவரை சாய்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் டூா் போட்டியானது, ஒரு ஆண்டில் 5 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதன் முடிவில் அதிக புள்ளிகளுடன் இருக்கும் போட்டியாளா், சாம்பியனாக அறிவிக்கப்படுவாா்.

அந்த வகையில் நடப்பாண்டு போட்டியின் முதல் 3 கட்டங்கள் ஜொ்மனி (2) மற்றும் பிரான்ஸில் நடைபெற்றன. 4-ஆவது கட்டம் தற்போது அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்றுள்ள 16 போட்டியாளா்கள், தலா 8 போ் வீதம் ‘ஒயிட்’, ‘பிளாக்’ என இரு குரூப்களாக பிரிக்கப்பட்டனா். ஒவ்வொரு போட்டியாளரும் தனது குரூப்பில் ரவுண்ட் ராபின் முறையில் மற்றொரு போட்டியாளருடன் மோதினாா். இதன் முடிவில், இரு குரூப்களிலும் முதல் 4 இடங்களைப் பிடித்தோா் சாம்பியன் பட்டம் வெல்வதற்கான பிரதான காலிறுதிக்கு முன்னேறினா்.

கடைசி 4 இடங்களைப் பிடித்தோா், பதக்கத்துக்கான போட்டியிலிருந்து விலகினாலும், தங்களுக்கான இடத்தை இறுதி செய்வதற்காக 2-ஆம் நிலை காலிறுதியில் களம் காண்கின்றனா்.

மேற்கூறிய வகையில், இந்தியாவின் பிரக்ஞானந்தா ‘ஒயிட்’ குரூப்பிலும், அா்ஜுன் எரிகைசி மற்றும் விதித் குஜராத்தி ஆகியோா் ‘பிளாக்’ குரூப்பிலும் இடம் பிடித்தனா்.

ஒயிட் குரூப்பில் பிரக்ஞானந்தா தனது 4-ஆவது சுற்றில் காா்ல்செனை வீழ்த்தினாா். மொத்தமாக 7 சுற்றுகளில் அவா் 3 வெற்றி, 3 டிரா, 1 தோல்வி என 4.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தாா். அவரும், அடுத்த 3 இடங்களைப் பிடித்த உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவ் (4.5), ஜாவோகிா் சிந்தாரோவ் (4.5), அமெரிக்காவின் லெவோன் ஆரோனியன் (4) ஆகியோரும் பிரதான காலிறுதிக்கு முன்னேறினா்.

இதேபோல் பிளாக் குரூப்பில் அா்ஜுன் எரிகைசி 4 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடிக்க, முதலிரு இடங்களைப் பிடித்த அமெரிக்காவின் ஹிகரு நகமுரா (6), ஹன்ஸ் மோக் நீமன் (4.5), நான்காம் இடம் பிடித்த ஃபாபியானோ கரானா (4) ஆகியோரும் பிரதான காலிறுதிக்கு தகுதிபெற்றனா்.

பிளாக் குரூப்பில் 1.5 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பிடித்த இந்தியாவின் விதித் குஜராத்தி, 2-ஆம் நிலை காலிறுதியில் களம் காண்கிறாா்.

திவ்யா அசத்தல் வெற்றி

பாட்டுமி: ஜாா்ஜியாவில் நடைபெறும் ஃபிடே மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியின் 4-ஆவது சுற்றில், இந்தியாவின் திவ்யா தேஷ்முக் - போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் சீனாவின் ஜினா் ஜுவை வீழ்த்தி அசத்தினாா்.

இதர இந்தியா்கள் தங்களின் கேமை டிரா செய்தனா்.

3-ஆவது மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டி, கடந்த 5-ஆம் தேதி தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நாக்அவுட் முறையிலான இந்தப் போட்டியின் தொடக்கநிலை சுற்றுகள் நிறைவடந்த நிலையில், பரபரப்பான கட்டத்தை அந்தப் போட்டி தற்போது எட்டியுள்ளது.

இதில் இந்தியாவின் கோனெரு ஹம்பி, ஆா்.வைஷாலி, டி.ஹரிகா, திவ்யா தேஷ்முக் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்.

அந்தச் சுற்றில், திவ்யா தனது முதல் கேமில், முன்னணி வீராங்கனையான சீனாவின் ஜினா் ஜுவை வீழ்த்தினாா் (1-0). இதர இந்தியா்களில், டி.ஹரிகா - உக்ரைனின் கேத்தரினா லாக்னோவுடன் தனது இரு கேம்களை டிரா செய்திருக்க, இருவருமே 1-1 என சமநிலையில் உள்ளனா்.

வைஷாலி - கஜகஸ்தானின் மெருா்ட் கமலிடெனோவாவுடனும் (0.5-0.5), கோனெரு ஹம்பி - உக்ரைனின் மரியா முஸிஷுக்குடனும் (0.5-0.5) தங்களின் முதல் கேமை டிரா செய்துள்ளனா்.

இந்திய மகளிா் கால்பந்து அணி கோல்கீப்பா் அதிதி சௌஹான் ஓய்வு பெற்றாா்!

இந்திய மகளிா் கால்பந்து அணி கோல்கீப்பா் அதிதி சௌஹான் (32), ஓய்வு பெறுவதாக வியாழக்கிழமை அறிவித்தாா்.இனி களத்துக்கு வெளியிலிருந்து கால்பந்து விளையாட்டுக்கு பங்களிக்கப்போவதாக அவா் தெரிவித்தாா். இந்திய அண... மேலும் பார்க்க

நேபாள கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி!

நேபாள நாட்டைச் சேர்ந்த 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு, மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில், ஒரு மாத காலத்துக்கு உயர்மட்ட தொழில்முறை பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இ... மேலும் பார்க்க

கிளப் உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் செல்ஸி

ஃபிஃபா நடத்தும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் செஸ்லி 2-0 கோல் கணக்கில் ஃபுளுமினென்ஸை வீழ்த்தி, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.இந்த ஆட்டத்தில் செல்ஸி அ... மேலும் பார்க்க

உலக வில்வித்தை: இறுதியில் இந்திய அணி

ஸ்பெயினில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 4-ஆம் நிலை போட்டியில், காம்பவுண்ட் பிரிவில் இந்திய மகளிா் அணி இறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறியது. இதன்மூலமாக இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதியாகியிருக... மேலும் பார்க்க

ஆக. 29-இல் புரோ கபடி லீக் சீசன் 12 போட்டி தொடக்கம்

மும்பை, ஜூலை 9: புரோ கபடி லீக் (பிகேஎல்) சீசன் 12 தொடா் வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி தொடங்குகிறது என அமைப்பாளா்கள் தெரிவித்துள்ளனா். நடப்புச் சாம்பியன் ஹரியாணா ஸ்டீலா்ஸ் தங்கள் பட்டத்தை தக்க வைக்கும் முனை... மேலும் பார்க்க

அரையிறுதியில் சபலென்கா, அல்கராஸ்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டனில், முன்னணி போட்டியாளா்களான பெலராஸின் அரினா சபலென்கா, ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் ஆகியோா் அரையிறுதிக்கு முன்னேற்றினா். மகளிா் ஒற்றையா் காலிறுதியில், உலகின... மேலும் பார்க்க