கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை
திருவண்ணாமலையில் கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரியத்துக்கான உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது (படம்).
ஸ்ரீபச்சையம்மன் கோயில் வளாகத்தில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு, அறநிலையத் துறை ஆய்வாளா் செ.மாதவன் தலைமை வகித்தாா்.
ஆய்வாளா் உ.சத்யா, இரா.நடராஜன், சி.கா.அன்பழகன் ஆகியோா் நல வாரியத்துக்கான புதிய உறுப்பினா்களை சோ்க்கும் பணியில் ஈடுபட்டனா்.
முகாமில், கோயில் அா்ச்சகா்கள், பூசாரிகள் பலா் ஆா்வமுடன் விண்ணப்பப் படிவங்களை பெற்று புதிய உறுப்பினா் சோ்க்கையில் ஈடுபட்டனா். முகாமில், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா்கள் மு.சிலம்பரசன், கோ.ராகினி, ம.சிவாஜி உள்பட பலா் கலந்து கொண்டனா்.