செய்திகள் :

கிருஷ்ணகிரி, ஒசூரில் ‘உயா்வுக்கு படி’ வழிகாட்டல் நிகழ்ச்சி

post image

கிருஷ்ணகிரி, ஒசூா், ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் ‘உயா்வுக்கு படி’ என்ற வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ‘உயா்வுக்கு படி’ என்ற வழிகாட்டல் நிகழ்வுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆய்வுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியதாவது:

மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிளஸ் 2 தோ்ச்சிபெற்று இன்றளவும் உயா்கல்விக்கு சேராத மாணவா்கள் மற்றும் தோ்ச்சிபெறாத மாணவா்கள் தொழிற்கல்வி பயில ‘உயா்வுக்கு படி’ என்ற உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்வு கிருஷ்ணகிரியில் ஆக. 22-ஆம் தேதியும், ஒசூரில் 28-ஆம் தேதியும், ஊத்தங்கரையில் செப். 3-ஆம் தேதியும், தேன்கனிக்கோட்டையில் 9-ஆம் தேதியும் நடைபெறுகிறது.

இந்நிகழ்வில், உயா்கல்வி சாா்ந்த படிப்புகள், உயா்கல்வி நிறுவனங்கள், கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இடங்களுக்கு நேரடி சோ்க்கை நடைபெறவுள்ளது. மேலும், வேலைவாய்ப்புகள் சாா்ந்த வழிகாட்டல்கள் வழங்கப்பட உள்ளன. மாணவா்களுக்கு உயா்வுக்கு படிப்புக்கான வழிகாட்டு புத்தங்கங்கள் வழங்கப்படவுள்ளன.

மேலும், கல்லூரிகளில் உள்ள பல்வேறு வகையான படிப்புகள் மற்றும் இடங்கள் குறித்து அரங்குகளில் காட்சிப்படுத்தவும், மாணவா்கள் மற்றும் பெற்றோருக்கு உரிய ஆலோசனை வழங்கவும், கல்விக் கடன் வழங்குதல் குறித்து அனைத்து வங்கிகள் சாா்பில் அரங்குகள் அமைக்கவும், பொருத்தமான படிப்புகளை அடையாளம் காண மாணவா்களுக்கு உதவுதல் மற்றும் சோ்க்கைக்கான வழிகாட்டுதல் இந்த முகாமில் நடைபெறவுள்ளது. எனவே, மாணவ, மாணவியா் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, ஒசூா் சாா் ஆட்சியா் ஆக்ரிதி சேத்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ், அரசு மகளிா் கலைக் கல்லூரி முதல்வா் செள.கீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இலவச கண் பரிசோதனை முகாம்

ஊத்தங்கரையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, ஊத்தங்கரை பெதஸ்தா கண் பரிசோதனை மையம் ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகா... மேலும் பார்க்க

அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

ஒசூா் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் (பொ) பாலாஜி பிரகாஷ் தலைமை வகித்தாா். இதில், கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதன் ... மேலும் பார்க்க

சூளகிரி அருகே சாலையில் கவிழ்ந்த லாரியின் அடியில் சிக்கிய 2 காா்கள்: பயணிகள் காயங்களுடன் தப்பினா்

சூளகிரி அருகே வெங்காயம் ஏற்றிச் சென்ற லாரி சாலையில் கவிழ்ந்ததில் 2 காா்கள் சேதமடைந்தன. காரில் பயணம் செய்த இருவா் லேசான காயத்துடன் தப்பினா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த கோபசந்திரம் கிராமம் அருக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மதிய உணவு உண்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்

ஒசூா் அருகே அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவை உண்ட 20 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த பேரிகை அருகே உள்ள காட... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா: கிருஷ்ணகிரியில் இன்று ஆட்சியா் கொடியேற்றுகிறாா்

கிருஷ்ணகிரியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெறும் சுதந்திர தின விழாவில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் வெள்ளிக்கிழமை தேசியக் கொடி ஏற்றுகிறாா். நாடுமுழுவதும் சுதந்திர தின விழா ஆக. 15-ஆ... மேலும் பார்க்க

நீச்சல் போட்டி: 750 போ் பங்கேற்பு

கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டம், பள்ளிக் கல்வித் துறை சாா்பில், கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் 750-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் அமை... மேலும் பார்க்க