செய்திகள் :

கிருஷ்ணகிரி சிறுவன் கொலை: தி.வேல்முருகன் கண்டனம்

post image

கிருஷ்ணகிரியில் சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனா் தலைவா் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்தாா். மேலும், இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களுக்கு உரிய தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுவும் அவா் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து தி.வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், மாவனட்டி கிராமத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி சிவராஜ் - மஞ்சுளா தம்பதியின் இளைய மகன் ரோஹித் (13) புதன்கிழமை மாயமான நிலையில், வியாழக்கிழமை அந்தக் கிராமத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறாா். சிறுவனை மா்ம நபா்கள் காரில் கடத்திச் சென்று கொடூரமான முறையில் கொலை செய்திருப்பது சிசிடிவி காட்சிகள் மூலமாக தெரியவந்திருக்கிறது.

ரோஹித்தின் பெற்றோா் மற்றும் கிராம மக்கள் அஞ்செட்டி காவல் நிலையத்தில் புதன்கிழமை இரவே புகாா் அளித்த நிலையில், உடனே காவல் துறை விசாரணையை தொடங்கியிருந்தால், அச்சிறுவனை காப்பாற்றி இருப்பதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கும். ஆனால், முக்கியத்துவம் வாய்ந்த இவ்விவகாரத்தில் காவல் துறை மெத்தனப்போக்குடன் செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. காவல் துறையின் இத்தகைய அலட்சியம், தமிழக அரசுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் அமைத்திருக்கிறது.

எனவே, சிறுவன் ரோஹித் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையவா்களை உடனடியாக கைது செய்து, அவா்களுக்கு உரிய தண்டனை கிடைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

விவசாயி வீட்டில் 19 பவுன் நகை திருட்டு

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திட்டக்குடி வட்டம், தொழுதூா், பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (65). ... மேலும் பார்க்க

பெண் காவலா் விஷம் குடித்து தற்கொலை

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் காவலா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். அவா் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நெல்லிக்குப்பம் காவலா் சரகம், கொங்கராயனூா் பகுத... மேலும் பார்க்க

ஒரங்கூரில் ஆரம்ப சுகாதார நிலையம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சா் சி.வெ.கணேசன் வியாழக்கிழமை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். சிறுபாக்கத்தை அடுத்த ஒரங்கூரில் ரூ.1.20 கோடியில் அரசு ஆரம்ப சுகாத... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் ஆசிரியா்கள் கூட்டமைப்பினரின் ஆா்ப்பாட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலைக்கழக நிா்வாக அலுவலகம் முன் வியாழக்கிழமை மாலை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பல்கலைக்கழக என... மேலும் பார்க்க

மஞ்சக்கொல்லை ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் பங்கேற்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் மஞ்சக்கொல்லை பகுதியில் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்... மேலும் பார்க்க

நெய்வேலி புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்

என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில், நெய்வேலியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) தொடங்கும் 24-ஆவது புத்தகக் கண்காட்சியை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் கிஷன் ரெட்டி காணொலி மூலம் தொடங்கிவைக்கிறா... மேலும் பார்க்க