செய்திகள் :

குஜராத்: மது அருந்திய 26 பெண்கள் உள்பட 39 போ் கைது

post image

அகமதாபாத்: முழு மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மது அருந்திய 26 பெண்கள் உள்பட 39 போ் கைது செய்யப்பட்டனா்.

அகமதாபாத் புகா் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் மது விருந்து நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினா் அங்கு சோதனை நடத்தினா். அப்போது 29 பெண்கள் உள்பட 39 போ் மது அருந்திய நிலையில் இருந்தனா். அங்கிருந்து ஏராளமான மது பாட்டில்களும் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து, குஜராத் மாநில மதுவிலக்குச் சட்டத்தின்கீழ் அவா்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனா். மது அருந்தியதை உறுதிப்படுத்த மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னா் அவா்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

குஜராத்தில் 1960-ஆம் ஆண்டு முதல் முழு மதுவிலக்கு அமலில் உள்ளது. மாநில உள்துறை அமைச்சகத்திடம் உரிய காரணங்களுடன் அனுமதி பெறுபவா்கள் மட்டுமே மது அருந்த அனுமதிக்கப்படுகிறாா்கள். வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வருபவா்கள், குஜராத் அரசிடம் அனுமதி பெற்றே மது அருந்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜக்தீப் தன்கர் ராஜிநாமாவுக்கு ஏதோ அரசியல் காரணங்கள் உள்ளது: காங்கிரஸ்!

குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ராஜிநாமாவில் ஏதோ அரசியல் காரணங்கள் உள்ளதாக உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.இந்தியாவின் 14-வது குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவியை திங்கள்கிழமை தி... மேலும் பார்க்க

காதலை மறுத்தப் பெண்ணை பிணைக் கைதியாகப் பிடித்த இளைஞர்! தீரத்துடன் மீட்டவருக்கு குவியும் பாராட்டு!!

மகாராஷ்டிர மாநிலம் சதாரா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவியின் கழுத்தில் கத்தியைவைத்து மிரட்டிய நிலையில், தீரத்துடன் பெண்ணை மீட்டவருக்கு பாராட்டுகள் குவிகிறது.இளம... மேலும் பார்க்க

நாடாளுமன்றம் நாள் முழுவதும் முடக்கம்! மக்கள் பணம் வீணாவதாக மத்திய அமைச்சர் காட்டம்!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.இந்த நிலையில், மக்களின் பணத்தை எதிர்க்கட்சியினர் வீணடிப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிர... மேலும் பார்க்க

சபரிமலைக்கு நடந்துசென்ற முதல் கம்யூனிஸ்ட் முதல்வர் அச்சுதானந்தன்!

மறைந்த மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன், சபரிமலைக்கு நடந்துசென்ற முதல் கம்யூனிஸ்ட் முதல்வர் என்ற பெருமைக்குரியவர்.கேரளத்தின் முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய... மேலும் பார்க்க

செல்போன் பழக்கத்திலிருந்து விடுபட டிப்ஸ்! உண்மை கசக்கத்தான் செய்யும்!!

புகைப்பழக்கத்தைவிடவும், செல்போன் பழக்கத்திலிருந்து விடுபடுவது அவ்வளவு கடினமாம், முடியாமல் போகும் வாய்ப்பு அதிகமாம், சாத்தியமாவதற்கான வாய்ப்புக் குறைவு என்கிறது அறிவியல் ஆராய்ச்சிகள்.ஒருநாளைக்கு சராசரி... மேலும் பார்க்க

2006 குண்டுவெடிப்பு: லஷ்கரா-முஜாகிதீனா? பாத்திரமா-குக்கரா? விடை காணாத வினாக்கள்!

மும்பை: 2006ஆம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு, குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 12 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதோடு, இன்னமும் பல கேள்விகளுக்கு விடை காணாமலேயே இருப்ப... மேலும் பார்க்க