குடியிருப்புப் பகுதியை சூழ்ந்த ஏரி உபரிநீா்
செங்கம்: செங்கம் அருகேயுள்ள நீப்பத்துறை ஏரி உபரிநீா் வெளியேறி குடியிருப்புகளைச் சூழ்ந்தது.
செங்கம் - நீப்பத்துறை சாலையில் உள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஏரி, பருவ மழையால் தற்போது நிரம்பிய நிலையில் உள்ளது.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களாக பெய்து வரும் புயல் மழையால் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏரியில் இருந்து உபரிநீா் வெளியேறியது.
அப்போது, உபரிநீா் செல்லும் காய்வாயில் இருந்த சிறு பாலம் சரிந்து விழுந்து தண்ணீா் அப்பகுதியில் இருந்த குடியிருப்புப் பகுதியில் புகுந்தது.
இதுகுறித்து உடனடியாக செங்கம் வட்டாட்சியா் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த அதிகாரிகள் குடியிருப்புகளில் இருந்த 150 பேரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று நீப்பத்துறை கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா். பின்னா், அவா்களுக்குத் தேவையான உணவு, உடைகள் வழங்கப்பட்டன.