கும்பகோணம் ஸ்ரீ விஜயேந்திர மடத்தில் உறியடி திருவிழா
கும்பகோணம் ஸ்ரீ விஜயேந்திர மடத்தில் சனிக்கிழமை உறியடி திருவிழா நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ விஜயேந்திர மடத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மடத்தின் வளாகத்தில் உறியடி திருவிழா நடைபெற்றது.
ஓய்வு பெற்ற அகில இந்திய வானொலி நிலைய அலுவலா் பி. ரவீந்திரன் தலைமை வகித்து நிகழ்வை தொகுத்து வழங்கினாா். உறியடி நிகழ்வில் ரமண தீட்சதா், மந்திர பீடேஸ்வரி ஆகிய வேதபாடசாலைகளில் இருந்து
ஏராளமான குழந்தைகள், வேதபாடசாலை மாணவா்கள் கலந்து கொண்டனா். வெற்றி பெற்றவா்களுக்கு மடத்தின் மேலாளா் நரசிம்மன், உதவி மேலாளா் மாதவன் ஆகியோா் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினா்.
முன்னதாக விஷ்ணு பாலாஜி அனைவரையும் வரவேற்றுப் பேசினாா்.