கும்மிடிப்பூண்டியில் பழைய பொருள்களை சேகரித்து வைக்கும் கிடங்கில் தீ விபத்து
கும்மிடிப்பூண்டியில் பழைய பொருள்களை சேகரித்து வைக்கும் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்தன.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த சூரவாரி கண்டிகை கிராமத்தில் அமைந்துள்ள பழைய பொருள்களை சேகரித்து வைக்கும் கிடங்கில் திங்கள்கிழமை அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை
இதுகுறித்து மேற்கண்ட கிடங்கியின் உரிமையாளரான சூரவாரிகண்டிகையைச் சேர்ந்த கமல், சிப்காட் போலீஸாருக்கு அளித்த தகவலின் பேரில் சிப்காட் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடம் விரைந்து இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் சுமார் 20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்தன.