பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
கும்மிடிப்பூண்டி: சிறுமி பாலியல் வன்கொடுமை; வடமாநில நபர் கைது - குற்றவாளியை உறுதிபடுத்தியது எப்படி?
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 4-ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட வழக்கில் சந்தேகப்படும் நபரை நேற்று (ஜூலை 25) கைது செய்துள்ளது காவல்துறை.
ஜூலை மாதம் 12-ம் தேதி, பள்ளிக்குச் சென்ற சிறுமி அன்று சனிக்கிழமை என்பதனால் மதியமே பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார். ரயில் நிலையம் அருகில் உள்ள மாந்தோப்பில் பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் நடந்த அன்று, ரயில் நிலையை சுவர் அருகே செல்லும்போது பின்னால் மர்ம நபர் தொடர்ந்து வருவதால் சிறுமி தயங்கியப்படி செல்வது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருக்கிறது. அந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவின.
ஊடங்கங்ளில் வெளியாகியுள்ள செய்திகளின்படி, குற்றச் சம்பவத்துக்குப் பிறகு அழுதபடியே சென்ற சிறுமியை அவரது பாட்டி வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அன்றைய தினமே விவசாயக் கூலிகளான சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சிறுமியை குமிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு மாற்றி, பின்னர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
சிறுமியின் பெற்றோருக்கு 3 குழந்தைகள். மூவரும் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். புகார் அளித்து ஒரு வாரத்துக்கு அதிகமாகியும் காவல்துறை துரிதமாக செயல்படவில்லை என குழந்தையின் பெற்றோர் சில நாள்களுக்கு முன்பு வேதனை தெரிவித்திருந்தனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் 30-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து குற்றவாளியைத் தேடும் பணி நடைபெற்றதாக காவல்துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள 30 வயது மதிக்கத்தக்க நபரை காண்பிக்க வேண்டும் என ஆரம்பாக்கம் காவல்நிலையத்தை பொதுமக்கள் நேற்று (ஜூலை 25) முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்துப் பேசிய வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், சந்தேகப்படும் நபருடன் கைது செய்யப்பட்டுள்ள நபரின் விவரங்கள் ஒத்துப்போகின்றன. மேலதிக விசாரணைக்கு பிறகே அவரின் விவரங்களை வெளியிட முடியும் எனக் கூறியுள்ளார்.
பிபிசி ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, கைது செய்யப்பட்டுள்ள நபர் ஒரு வடமாநிலத்தவர். தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் உள்ள தாபா ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
அந்த நபர் விடுமுறை தினங்களில் அந்தப் பகுதியில் சுற்றி வந்துள்ளார். அதற்கான சிசிடிவி காட்சிகள் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளன.
மேலும் குற்றச் செயலின்போது அந்த நபருக்கு ஒரு ஃபோன்கால் வந்துள்ளது அவர் ஹிந்தியில் பதிலளித்துள்ளார் என்பதை விசாரணையில் தெரிந்துகொண்டுள்ளனர். செல்ஃபோன் டவர்களை ஆராய்ந்ததுடன், அன்று அந்த நபர் அதே ஆடையுடன் தாபாவில் பணியாற்றியதையும் சிசிடிவி காட்சிகளில் கண்டறிந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியிடம் புகைப்படங்கள் மற்றும் அடையாளங்களை உறுதிபடுத்தியிருக்கின்றனர்.