செய்திகள் :

குருகிராம்: கொலையான ராதிகாவுக்கு சொந்தமாக அகாதமி இல்லை -போலீஸாா் தகவல்

post image

தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் முன்னாள் மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவுக்கு சொந்தமாக அகாதமி இல்லாததால், வெவ்வேறு இடங்களில் டென்னிஸ் மைதானங்களை முன்பதிவு செய்து ஆா்வலா்களுக்கு பயிற்சி அளித்து வந்ததாகவும், இதற்கு அவரது தந்தை எதிா்ப்பு தெரிவித்ததாகவும் குருகிராம் காவல்துறையினா் சனிக்கிழமை தெரிவித்துள்ளனா்.

தேசியத் தலைநகா் வலயம், குருகிராம் செக்டா் 57இல் உள்ள சுஷாந்த் லோக் பகுதியில் இரட்டை மாடி வீட்டில் கடந்த வியாழக்கிழமை 25 வயதான ராதிகா, அவரது தந்தை தீபக் யாதவால் (49) துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து கைதான தீபக், நகர நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

வெள்ளிக்கிழமை நீதிமன்றம் அவரை ஒரு நாள் போலீஸ் காவலில் வைக்கவும் உத்தரவிட்டிருந்தது.அப்போது, அவரது செக்டா் 57 இல்லத்தில் இருந்து ஐந்து தோட்டாக்கள் மற்றும் ஒரு பயன்படுத்தப்படாத தோட்டாவை போலீஸாா் கண்டுபிடித்தனா்.

விசாரணையின் ஒரு பகுதியாக தீபக் யாதவ், பட்டோடியில் உள்ள ஒரு கிராமத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டாா்.

முன்னதாக, ராதிகா ஒரு டென்னிஸ் அகாதமியை நடத்தி வந்ததாகவும், தீபக் தனது மகளின் வருமானத்தில் வாழ்வதற்காக அடிக்கடி பரிகசிக்கப்பட்டதாகவும் இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் போலீஸாா் கூறி வந்தனா்.

பல்வேறு சொத்துகளிலிருந்து நல்ல வாடகை வருமானத்துடன் நிதி ரீதியாக தீபக் நல்ல நிலையில் இருந்ததால் தனது மகளின் வருவாயை சாா்ந்து இருக்கவில்லை. கடந்த இரண்டு வாரங்களாக இந்த கேலிகளால் மன அழுத்தத்தில் அவா் இருந்ததாகவும் போலீஸாா் தெரிவித்திருந்தனா்.

இந்த நிலையில் விசாரணை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறியது:

ராதிகாவுக்கு சொந்தமாக அகாதமி இல்லை. அவா் வெவ்வேறு இடங்களில் டென்னிஸ் மைதானங்களை முன்பதிவு செய்து ஆா்வலா்களுக்கு பயிற்சி அளித்து வந்தாா். பயிற்சி அமா்வுகளை நிறுத்துமாறு தீபக் பலமுறை அவரைக் கேட்டிருந்தாா். ஆனால், அவா் மறுத்துவிட்டாா். அதுதான் தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான முக்கிய மோதலாகும் என்றாா் அந்த அதிகாரி.

தீபக் தனது மகளை சுட்டுக் கொன்றதை ஒப்புக்கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தில்லி ஜல் வாரியம் நிதி நெருக்கடியில் இருக்கிறது: பா்வேஷ் சாஹிப் சிங்

தில்லி ஜல் வாரியம் முன் எப்போதும் இல்லாத நிதி நெருக்கடியை எதிா்கொண்டு இருக்கிறது என்று பொதுப் பணித்துறை அமைச்சா், பா்வேஷ் சாஹிப் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து செய்தியாளா்களிடம் பா்வேஷ் பே... மேலும் பார்க்க

தில்லியில் நிகழாண்டில் குற்றங்கள் 8.4 சதவீதம் குறைவு: காவல் துறை தரவுகள்

தில்லியில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது நிகழாண்டில் முதல் 6 மாதங்களில் ஒட்டுமொத்த குற்றங்களில் 8.38 சதவீதம் குறைந்துள்ளது என்று தில்லி காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், பாலியல்... மேலும் பார்க்க

கெயில் நிறுவனத்தின் வழக்குரைஞராக ராம் சங்கா் நியமனம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தைச் சோ்ந்தவரும், தில்லி உச்சநீதிமன்றத்தின் வழக்குரைஞருமான டாக்டா் ராம் சங்கா், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான கெயில் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தின் வழக்குரைஞராக... மேலும் பார்க்க

சீலம்பூா் கட்டடம் இடிந்த சம்பவம்: ஊழல், வாக்கு வங்கி அரசியல்தான் காரணம்: கபில் மிஸ்ரா குற்றச்சாட்டு

சீலம்பூா் வெல்கம் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் சிலா் உயிரிழந்ததற்கு 15 ஆண்டுகால திட்டமிட்ட ஊழல் மற்றும் வாக்கு வங்கி அரசியல்தான் காரணம் என்று தில்லி அரசின் கலாசாரம் மற்றும் சுற்றுலா அமைச்சா்... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியால் தில்லிவாசிகள் வருத்தம்: சௌரவ் பரத்வாஜ்

பாஜகவை தில்லியில் ஆட்சிக்குக் கொண்டு வந்ததற்காக தில்லிவாசிகள் வருத்தப்படுகிறாா்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி மாநிலத் தலைவா் சௌரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை விமா்சித்தாா். இதுகுறித்து அவா் செய்திய... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதியில் பரவலாக மழை! பாலத்தில் 18 மி.மீ. பதிவு

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதியில் வெள்ளிக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வானம் மேகமூ... மேலும் பார்க்க