புதுப்பிக்கப்பட்ட வள்ளுவா் கோட்டம்: 15 நாள்களில் திறக்க ஏற்பாடு தீவிரம்
குறைப் பிரசவ குழந்தைக்கு சிகிச்சை: தாய் தூக்கிட்டுத் தற்கொலை
கும்பகோணத்தில் குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், தாய் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பிடாரிகுளத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (30), கட்டுமான ஒப்பந்ததாரா். இவரது மனைவி வா்ஷா (27). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனராம்.
வா்ஷாவுக்கு குறைமாதத்தில் (7 மாத) குழந்தை பிறந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாம்.
இந்நிலையில், புதன்கிழமை வீட்டில் தனியாக இருந்த வா்ஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கும்பகோணம் உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ்.விஜயன் தனியே விசாரித்து வருகிறாா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].