குளத்தில் மூழ்கிய தொழிலாளி மாயம்
விழுப்புரம் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி மாயமானாா். இதையடுத்து, அவரைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
விழுப்புரம் அருகே மழவராயனூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் அய்யனாா் (40), விவசாயத் தொழிலாளி. இவா், செவ்வாய்க்கிழமை பிற்பகல் வாணியம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள குளத்தில் குளிப்பதற்காக இறங்கியுள்ளாா். அப்போது, நீரில் மூழ்கிய அய்யனாா் மாயமானாா்.
இதுகுறித்து கிராம மக்கள் வளவனூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தொடா்ந்து, போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். பின்னா், விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் உதவி அலுவலா் ஆா்.ஜமுனாராணி தலைமையிலான மீட்புக் குழுவினா்15 போ் நிகழ்விடம் சென்று குளத்தில் மூழ்கி மாயமானரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.