கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பைஜுஸ் நீக்கம்!
இணையவழிக் கல்விச் சேவையை வழங்கிவரும் பைஜுஸ் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
மேலும், விளம்பரங்களைக் கிளிக் செய்தால், தோன்றும் இணையதளத்தின் முதல் பக்கமும் பயனர்களுக்குத் தெரியாத வகையில் செய்யப்பட்டுள்ளது.
இதோடு மட்டுமின்றி, பைஜுஸ் செயலியில் ஏற்கெனவே பணம் செலுத்தி விடியோக்களைப் பார்த்துவந்த பயனர்களுக்கு அந்த அமசமும் இணையதளப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
அமேசான் இணைய சேவைகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல், நிலுவையில் வைத்திருந்த காரணத்தால் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பைஜுஸ் செயலி நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் இணைய சேவையானது, பைஜுஸ் செயலியிலுள்ள விடியோக்களுக்கு கிளவுட் கம்ப்யூட்டிங் சேவையை வழங்கிவந்தது. அதாவது, பைஜுஸ் செயலியின் விடியோக்களை பயனர்கள் எளிதில் அணுகும் வகையில், செயலியின் அணுகுமுறை, நெட்வொர்க்கிங், ஸ்டோரேஜ் (நினைவகம்) போன்றவற்றை நிர்வகித்துவந்தது.
இந்தச் சேவையை வழங்கிவந்ததற்கான உரிய நிதியை பைஜுஸ் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பைஜுஸ் நீக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 22 பில்லியன் டாலர் மதிப்புடையதாக இருந்த பைஜுஸ் நிறுவனம், தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ஐபோன் மட்டுமல்ல; அனைத்துக்கும் வரிதான்! டிரம்ப்பிடம் சிக்கிய சாம்சங்!