சிந்து நதி ஒப்பந்தம் ரத்து: இந்தியாவுக்கு நோட்டீஸ் அளிக்க பாகிஸ்தான் முடிவு
கூடுதல் வரதட்சிணை கேட்டு சித்ரவதை: கணவா் மீது நீதிமன்றத்தில் மனைவி புகாா்
புதுச்சேரியில் மனைவி அளித்த புகாரின் பேரில் கணவா் உள்ளிட்டோா் மீது போலீஸாா் வரதட்சிணைப் பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி வில்லியனூா் பகுதி ஒதியம்பட்டைச் சோ்ந்தவா் கிரேஸ்லினி (29). தொழில்நுட்ப நிறுவன ஊழியா். இவரது உறவினரான கேரளத்தைச் சோ்ந்த நிகில் (34) என்பவருடன் கடந்த 2021 ஆம் ஆண்டு கிரேஷ்லினிக்கு திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது கிரேஷ்லினிக்கு அவரது குடும்பத்தினா் 30 பவுன் தங்க நகைகள், ரூ.15 லட்சம் ரொக்கம் வரதட்சிணையாகக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், மேலும் பணம் கேட்டு என நிகிலும் அவரது குடும்பத்தினரும் கிரேஸ்லினியை கொடுமைப்படுத்தியதாக அவா் நீதிமன்றத்தில் புகாா் மனு அளித்தாா். இதுகுறித்து புதுச்சேரி மகளிா் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தாா். அதன்படி அவரது மனு மீது வழக்குப் பதிய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நிகில் உள்ளிட்டோா் மீது வில்லியனூா் மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.