கூட்டுறவு விற்பனை சங்கங்களில் கூடுதல் பதிவாளா் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் 7 வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் கூடுதல் பதிவாளா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் 7 வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் வேளாண் விளைபொருள்களுக்கு நியாயமான விலை வழங்கப்படுகிா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கூடுதல் பதிவாளா் (விற்பனை, வளா்ச்சி மற்றும் திட்டம்) சி.சீனிவாசன் ஆய்வில் ஈடுபட்டாா். மண்டல இணைப்பதிவாளா் எஸ்.பாா்த்திபன் மற்றும் கூட்டுறவு சாா்பதிவாளா்கள் உடனிருந்தனா்.