செய்திகள் :

கூலி வசூல் எவ்வளவு?

post image

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் இணைகிறார்கள் என்கிற அறிவிப்பு வந்தபோதே பலருக்கும் ஆர்வம் மேலோங்க, தொடர்ந்து, கூலி திரைப்படத்தில் நடிகர்கள் நாகர்ஜூனா, உபேந்திரா, ஆமீர் கான் உள்ளிட்ட பிரபலங்கள் இணையவும் நிச்சயமாக வணிக ரீதியாக இப்படம் தமிழில் சாதனையை நிகழ்த்தும் என கணிக்கப்பட்டது.

அதேபோல், படத்திற்கான புரமோஷன்கள் மற்றும் எதிர்பார்ப்பு உச்சமடைய பிரம்மாண்டமாக கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

ஆனால், மோசமான கதை மற்றும் திரைக்கதையாலும் அதனால் உருவான லாஜிக் பிரச்னைகளாலும் கூலி திரைப்படம் கடுமையான எதிர்வினைகளைச் சந்தித்துள்ளது.

இதனால், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜைப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் கூலி திரைப்படம் முதல் 3 நாள்களில் ரூ.280 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் முதல் நாளிலேயே ரூ. 151 கோடி வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பராசக்தியில் அப்பாஸ்!

rajinikanth's coolie movie crossed rs.280 crores in world wide collection

மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநரின் புதிய பட போஸ்டர்!

இயக்குநர் சிதம்பரம் இயக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் போஸ்டர் வெளியாகியுள்ளது.‘ஜான் ஈ மன்’ (jan.e.man) திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர் சிதம்பரம். அப்படம், வெற்றிப் படமானதுடன் கதை ரீதியாக... மேலும் பார்க்க

பராசக்தியில் அப்பாஸ்!

நடிகர் அப்பாஸ் பராசக்தி திரைப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக இருந்த நடிகர் அப்பாஸ் பல வெற்றிப்படங்களில் துணை நடிகராக நடித்திருக்கிறார். காதல் தேசம், ... மேலும் பார்க்க

ஷங்கர், மணிரத்னத்தின் தோல்வி பயத்தைத் தருகிறதா? ஏ. ஆர். முருகதாஸ் பதில்!

இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் மூத்த இயக்குநர்கள் குறித்து பேசியுள்ளார். இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தாலும் இறுதியாக அவர் இயக்கங்களில் வெளியான தர்பார், சிக்கந்தர் ஆகிய திரைப்பட... மேலும் பார்க்க

அலெஹாந்த்ரோ இனாரிட்டு அழைத்தும் வாய்ப்பை மறுத்த ஃபஹத்! ஏன்?

ஆஸ்கர் விருதுவென்ற இயக்குநர் அலெஹான்ட்ரோ இனாரிட்டு பட வாய்ப்பை ஃபஹத் ஃபாசில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஃபஹத் ஃபாசில் இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராகப் பார்க்கப்படுகிறார். இவர் நடிக்... மேலும் பார்க்க