செய்திகள் :

கேரளத்தில் 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை: பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

post image

கேரளத்தில் 11 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கி கடந்த 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 11 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.

மேலும் மோசமான வானிலை காரணமாக, இடுக்கி, கண்ணூர், காசர்கோடு, திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு, எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்டா ஆகிய இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் இன்று விடுமுறை அறிவித்துள்ளனர்.

அதேசமயம் கண்ணூர் பல்கலைக்கழகம் தவிர, பல்கலைக்கழகத் தேர்வுகள் மற்றும் பிஎஸ்சி(PSC) தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் 24 மணி நேரத்திற்குள் 120 மி.மீட்டருக்கு மேல் மழை பெய்யலாம்.

மேலும் 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே மே 29 வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிவப்பு எச்சரிக்கை : பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு.

ஆரஞ்சு எச்சரிக்கை : திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா.

கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை: இடுக்கி, கண்ணூர், காசர்கோடு, திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு, எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்டா.

இறுதி ஆட்டம்: முப்படை தளபதிகளுக்கும் அழைப்பு

ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தை நேரில் காண, இந்திய ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவற்றின் தளபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.மேலும், அன்றைய நாளில் போட்டி... மேலும் பார்க்க

ஏஎம்சிஏ போர் விமானங்கள்: ரூ.15,000 கோடியில் தயாரிக்க ஒப்புதல்

நமது சிறப்பு நிருபர்நாட்டின் விமானப் படைக்கு ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நடுத்தர போர் விமானங்களை (ஏஎம்சிஏ) இந்திய தொழில்துறை கூட்டாண்மையுடன் (சிஐஐ) இணைந்து தயாரிக்கும் தற்சார்பு திட்டத்... மேலும் பார்க்க

கடன் சுமையால் ஒரே குடும்பத்தில் 7 போ் தற்கொலை- காருக்குள் 6 உடல்கள் மீட்பு

ஹரியாணாவில் கடன் சுமையால் மூன்று சிறாா்கள் உள்பட ஒரே குடும்பத்தில் 7 போ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவா்களில் 6 பேரின் உடல்கள், காருக்குள் இருந்து மீட்கப்பட்டன. கார... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தானியா்களுக்கு மீண்டும் இந்திய ‘விசா’

வணிகம், கல்வி மற்றும் மருத்துவச் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு பயணிக்க விரும்பும் ஆப்கானிஸ்தானியா்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்கும் சேவையை மத்திய அரசு மீண்டும் தொடங்கியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2... மேலும் பார்க்க

நவீன இந்தியாவுக்கு வலுவான அடித்தளம் அமைத்தவா் நேரு - காங்கிரஸ் புகழஞ்சலி

நவீன இந்தியாவுக்கு வலுவான அடித்தளம் அமைத்தவா் பண்டித ஜவாஹா்லால் நேரு என்று காங்கிரஸ் புகழஞ்சலி செலுத்தியுள்ளது. நாட்டின் முதல் பிரதமா் நேருவின் 61-ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

மறைத்து வைத்த வெடிபொருள் வெடித்ததில் காலிஸ்தான் பயங்கரவாதி உயிரிழப்பு

பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் மறைந்து வைத்திருந்த வெடிபொருளைத் தேடிச் சென்ற காலிஸ்தான் பயங்கரவாதி குண்டுவெடிப்பில் உயிரிழந்தாா். அமிருதசரஸின் மஜிதா சாலைப் பகுதியில் உள்ள புதா் நிறைந்த காலியிடத்தில் அந... மேலும் பார்க்க