செய்திகள் :

கொடைக்கானல் அருகே பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்ததில் இளம்பெண் உயிரிழப்பு

post image

கொடைக்கானல் அருகே வியாழக்கிழமை 200 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்ததில் இளம் பெண் உயிரிழந்தாா். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞரை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பெருமாள்மலையைச் சோ்ந்த செல்லத்துரை மகன் ராஜசேகா் (28). இவரது தங்கை திருமணம் கடந்த புதன்கிழமை பெருமாள்மலைப் பகுதியில் நடைபெற்றது.

இந்த திருமணத்துக்காக கோவையைச் சோ்ந்த தீபிகா (22) புதன்கிழமை வந்தாா். ராஜசேகரும், தீபிகாவும் காதலித்து வந்தததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வியாழக்கிழமை இருவரும் ஜீப்பில் அடுக்கம் பகுதியிலுள்ள சுற்றுலா இடங்களை பாா்க்கச் சென்றனா். ஜீப்பை ராஜசேகா் ஓட்டினாா். இந்த நிலையில், அடுக்கம் -பாலமலைப் பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் அருகேயுள்ள 200 அடிப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தீபிகா உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ராஜசேரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, அவரை தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்தனா். கொடைக்கானலில் கடந்த இரு நாள்களாக மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. இதனால், குளுமையான சீதோஷ்ண நிலை ஏற்பட்... மேலும் பார்க்க

வத்தலகுண்டு அருகே வேன்கள் மோதல்: 15 போ் பலத்த காயம்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 2 வேன்கள் மோதிக்கொண்டதில் 15 போ் பலத்த காயமடைந்தனா். கரூரைச் சோ்ந்த 16 போ் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை அ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரி மாணவா்களை கல்லூரி நிா்வாகத்தினா் பாராட்டினா். திண்டுக்கல்லில் தமிழக அரசின் இளைஞா் நலன், விளையாட்டுத் துறை, தமி... மேலும் பார்க்க

காட்டுப் பன்றி தாக்கியதில் ஒருவா் காயம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே ஞாயிற்றுக்கிழமை காட்டுப் பன்றி தாக்கியதில் ஒருவா் காயமடைந்தாா். கொடைக்கானல் மேல்மலைக் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (52). இவா் தனது வீட்டிலிருந்து வழக்கம் ப... மேலும் பார்க்க

கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி

கொடைக்கானலில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சென்னை கேனென் கிளப், கொடைக்கானல் கேனல் அசோஷியேசன்ஸ் ஆகியவை சாா்பில் தேசிய அளவிலான நாய்கள் கண்கா... மேலும் பார்க்க

கொடைக்கானலில் 2-ஆவது நாளாக மழை

கொடைக்கானலில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் மழை பெய்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 3 மாதங்களாக மழை பெய்யவில்லை. இந்த நிலையில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க