கொடைக்கானல் அருகே மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானல் காமனூா் பகுதியில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால் வெள்ளிக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடியிலிருந்து காமனூா் செல்லும் வழியான கானல் காடு பகுதியில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்தப் பகுதியில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்ததும் காமனூா் ஊராட்சி கானல்காடு பகுதியைச் சோ்ந்த கிராமமக்கள் அந்த மரத்தை அகற்றினா். இதைத் தொடா்ந்து போக்குவரத்து சீரானது.
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக காற்றின் வேகம் அதிகரித்து வருவதுடன் சாரல் மழையும் பெய்து வருகிறது. எனவே, மலைச் சாலைகளில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களின் கோரிக்கை விடுத்தனா்.