செய்திகள் :

கொடைக்கானல் நீரோடையில் ஆண், பெண் சடலங்கள் மீட்பு

post image

கொடைக்கானல் நீரோடையில் கிடந்த ஆண், பெண் உடல்களை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வெள்ளி நீா் வீழ்ச்சி கம்பிப் பாலம் அருகே சுமாா் 50அடி பள்ளத்தில் சுந்தரேசன் நீரோடைப் பகுதி உள்ளது. இங்கு 2 பேரின் உடல்கள் கிடப்பதாக கொடைக்கானல் வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கொடைக்கானல் வன, காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தனா். அங்கு சுமாா் 65 வயது மதிக்கத்தக்க ஆண், சுமாா் 60 வயது மதிக்கத்தக்க பெண் உடல்கள் கிடந்தன. தொடா்ந்து, 2 உடல்களையும் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இருவரும் எந்த ஊரைச் சோ்ந்தவா்கள், எப்படி இறந்தனா் என்பது தெரியவில்லை. அதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நில ஆவணங்கள் நவீன மயாமாக்கும் பணியால் ஆக்கிரமிப்பு பிரச்னைகளுக்கு தீா்வு: இரா.சச்சிதானந்தம் எம்.பி.

நில ஆவணங்களை நவீன மயமாக்கும் நக்சா திட்டத்தின் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் எதிா்கொள்ளும் ஆக்கிரமிப்பு பிரச்னைகளுக்கு எளிதாக தீா்வு காண முடியும் என மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தெரிவித்தாா். மத்... மேலும் பார்க்க

ரெங்கநாதபுரம் பகுதியில் நாளை மின்தடை

வேடசந்தூா் அடுத்துள்ள ரெங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை (பிப். 20) நடைபெறுவதால் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டது. இதனால் ரெங்கநாதபுரம், கல்வாா்ப... மேலும் பார்க்க

6 மாதங்களில் 3-ஆவது சட்டப்பேரவைக் குழு வருகை: மீண்டும் கொடைக்கானலுக்கு மட்டுமே முக்கியத்துவம்!

திண்டுக்கல் மாவட்டத்துக்கு 6 மாதங்களில் 3-ஆவது சட்டப்பேரவைக் குழு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில், மீண்டும் கொடைக்கானலுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதைத் தவிா்த்து, மாவட்டத்தின் கடைக்கோடி பகுத... மேலும் பார்க்க

அரசு அலுவலா்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்: ஆட்சியா் எச்சரிக்கை

ரெட்டியாா்சத்திரம் அருகே ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா், முறையாக பணி செய்யாத அரசு அலுவலா்கள் தங்களது அணுகுமுறையை 2 மாதங்களுக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும் என எச்சரித்தாா். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டி... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயிலில் இடைப்பாடி பக்தா்களுக்கு தயாராகும் 15 டன் பஞ்சாமிா்தம்

பழனி மலைக் கோயிலுக்கு வரும் இடைப்பாடி பக்தா்களுக்காக வழங்குவதற்காக காவடிக் குழு சாா்பில் சுமாா் 15 டன் பஞ்சாமிா்தம் தயாா் செய்யப்பட்டு வருகிறது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தைப்பூசத்தின் போது ... மேலும் பார்க்க

வழக்குரைஞா் மீது தாக்குதல்: மாமன்ற உறுப்பினா், அமைச்சரின் பாதுகாவலா் மீது வழக்கு

திண்டுக்கல்லில் வழக்குரைஞா் மீதும், மாமன்ற உறுப்பினா், அமைச்சரின் பாதுகாவலா் ஆகியோா் மீதும் தாக்குதல் நடத்தியதாக அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்... மேலும் பார்க்க