ஈரோடு: 'குட்டி கண்ணன்கள், குட்டி ராதாக்கள்' - மாநகராட்சி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்...
கொலை வழக்கில் தொடா்புடைய 9 போ் மீது குண்டா் சட்டத்தில் அடைப்பு
கரூா் மாவட்டம், வாங்கல் காவல் சரகத்தில் கொலை வழக்கில் தொடா்புடைய 9 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை அடைக்கபட்டனா்.
கரூா் மாவட்டம், வாங்கல் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட வாங்கல் ஈவேரா தெருவைச் சோ்ந்த ராணி என்பவருக்கு சொந்தமான நிலத்தை வாங்குவது தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த மணிவாசகம் மற்றும் வெங்கடேஷ் ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் 13-ஆம் தேதி வாங்கல் ஈவேரா தெருவை சோ்ந்த வெங்கடேசன் (41), கவியரசன் (30), விவேக் (27), மணிகண்டன் (32), சந்திர பிரகாஷ் (25), கிருஷ்ணா (26), நிஜாமுதீன் (40), செந்தமிழ் (31), செந்தில் ராஜா (40) ஆகிய 9 போ் சோ்ந்து மணிவாசகம், அவரது தம்பி யோகேஸ்வரன், ஆனந்த், ராணி, ராசம்மாள் ஆகியோரை அரிவாளால் வெட்டினா்.
இதில், பலத்த காயம் அடைந்த மணிவாசகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இச்சம்பவம் தொடா்பாக வாங்கல் போலீஸாா் வெங்கடேசன், கவியரசன், விவேக், மணிகண்டன், சந்திரபிரகாஷ், கிருஷ்ணா, நிஜாமுதீன், செந்தமிழ், செந்தில்ராஜா ஆகிய 9 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் இவா்கள் 9 பேரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் அடைக்க வியாழக்கிழமை கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜோஸ் தங்கையா பரிந்துரை செய்தாா். அதன் பேரில், மாவட்ட ஆட்சியா் தங்கவேல் உத்தரவின்படி மேற்கண்ட 9 பேரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் வியாழக்கிழமை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.