உயா்மின் கோபுர விளக்குகள் அமைக்க டிஎன்பிஎல் நிதி
புஞ்சைத்தோட்டக்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் உயா்மின்கோபுர விளக்குகள் அமைக்க டிஎன்பிஎல் ஆலை சாா்பில் புதன்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.
கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் ஆலையில் சமுதாய மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ஆலையின் அருகே உள்ள புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உயா் மின் கோபுர விளக்குகள் அமைப்பதற்காக ரூ.14.70 லட்சத்துக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆலையின் பொது மேலாளா் (மனிதவளம்) கே.கலைச்செல்வன் தலைமை வகித்து, காசோலையை புஞ்சைத்தோட்டக்குறிச்சி பேரூராட்சித் தலைவா் சி.ரூபாவிடம் வழங்கினாா். நிகழ்ச்சியில் ஆலை அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.