இந்திய அணிக்காக விளையாடும் கனவை ஒருபோதும் கைவிடமாட்டேன்: அஜிங்க்யா ரஹானே
கோடை விடுமுறை: கோவை - உதகை இடையே சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
கோடை விடுமுறையை ஒட்டி கோவை - உதகை இடையே கூடுதலாக 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து உதகை, குன்னூா், கோத்தகிரி, கூடலூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் 65 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்துகள் மூலமாக சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு சென்று வருகின்றனா்.
தற்போது, உதகை செல்லும் உதகை மாவட்ட பதிவெண் அல்லாத நான்கு சக்கர, இருசக்கர வாகனங்களுக்கு இ- பாஸ் அவசியம் என்பதால் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் கோவையில் இருந்து பேருந்துகளில் உதகைக்கு செல்கின்றனா்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் உதகை செல்வோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, கோவை மேட்டுப்பாளையம் சாலை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.