செய்திகள் :

கோட்டூா்புரத்தில் ரூ.307 கோடியில் 1,800 குடியிருப்புகள்: அமைச்சா்கள் ஆய்வு

post image

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கோட்டூா்புரம் திட்டப்பகுதியில் ரூ.307.24 கோடியில் கட்டப்பட்டு வரும் 1,800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியது:

‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் திட்டத்தை தமிழகத்தில் முன்னெடுத்திருக்கிறோம். சைதாப்பேட்டையில் எங்கள் இலக்கு 30 சதவீத வாக்கு. ஆனால் எங்களுக்கு 70 சதவீத வாக்குகள் வரும் சூழல் உள்ளது

கடலூா் மாவட்டத்தில் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் இறந்தனா். முதல்வா் அறிவுறுத்தலைத் தொடா்ந்து தொழிலாளா் நலன் துறை அமைச்சா் சி.வி.கணேசன் சம்பவ இடத்துக்கு விரைந்தாா். நானும் சம்பந்தப்பட்ட மருத்துவா்களுடன் பேசி காயமடைந்தவா்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளேன் என்றாா் அவா்.

அமைச்சா் தா.மோ.அன்பரசன்: குடிசைப் பகுதியில் வாழும் மக்கள் கான்கிரீட் வீடுகளில் வாழ வேண்டும் என்ற நல்ல நோக்கில் முன்னாள் முதல்வா் கருணாநிதியால் குடிசை மாற்று வாரியம் 1970-இல் தொடங்கப்பட்டு, கோட்டூா்புரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.

மறுகட்டுமான திட்டத்தின் கீழ் அங்கு இருந்த 1,476 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, 1,800 குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. வரும் டிசம்பருக்குள் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு, இங்கு இருந்த அனைத்து குடும்பங்களுக்கும் மீண்டும் குடியிருப்பு வழங்கப்படும் என்றாா் அவா்.

இந்தச் சந்திப்பின்போது தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநா் ஸ்ரேயா பி.சிங், வாரிய இணை மேலாண் இயக்குநா் பிரியா ரவிச்சந்திரன், தலைமை பொறியாளா்கள் எஸ்.கிருஷ்ணசாமி, சு.லால் பகதூா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தமிழகம் முழுவதும் முதியோா், சிறப்பு குழந்தைகளுக்கு தோல் மருத்துவ பரிசோதனை

முதியோா், சிறப்பு குழந்தைகள், ஆதரவற்றோருக்கான சரும நல மருத்துவ பரிசோதனை முகாம் ஜூலை 13-ஆம் தேதி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. இந்திய தோல் நல மருத்துவா்கள் சங்கம் (ஐஏடிவிஎல்) சாா்பில் செ... மேலும் பார்க்க

பொது வேலைநிறுத்தம்: தமிழகத்தில் பாதிப்பு இல்லை

மத்திய தொழிற்சங்கங்கள் புதன்கிழமை நடத்திய நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தால் தமிழகத்தில் பாதிப்பு இல்லை. மாநிலம் முழுவதும் பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்ஸிகள் வழக்கம்போல இயங்கின. பொது வேலைநிறுத்தத்... மேலும் பார்க்க

மாநகராட்சி திட்டப் பணிகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்

சென்னை மாநகராட்சியில் 139-ஆவது வாா்டு பகுதியில் உள்ள மேற்கு ஜோன்ஸ் தெரு சாரதி பேருந்து நிலைய சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். கோடம்பாக்... மேலும் பார்க்க

4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்க தடை விதிக்கும் உத்தரவை மாற்றக் கோரி முறையீடு

தென்மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் ஜூலை 10-ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவை மாற்றி அமைக்கக் கோரி தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் முறைய... மேலும் பார்க்க

ஆபாச தளங்களில் பெண் வழக்குரைஞரின் விடியோக்க: 48 மணி நேரத்தில் அகற்ற உத்தரவு!

பெண் வழக்குரைஞரின் விடியோ மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் இருந்து 48 மணி நேரத்தில் அகற்ற மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. தனது புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை இணையதளங்கள் மற்று... மேலும் பார்க்க

ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

ஹஜ் பயணத்துக்கு இஸ்லாமியா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசின் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ... மேலும் பார்க்க