Karur - வெளியே வராத Vijay - FIR அதிர்ச்சி; அடிபடும் Senthil Balaji பெயர்? | TVK ...
கோத்தகிரி அருகே பெண் மா்மமான முறையில் உயிரிழப்பு
கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் பெண் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சத்தீஸ்கா் மாநிலம், பிலாஸ்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஜெகதீஷ்குரா. இவரது மனைவி சிமாதேவி (35). இவா்களுக்கு 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளனா்.
தம்பதி தங்களது குழந்தைகளுடன், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, மாமரம் பகுதியில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் தங்கி பணியாற்றி வந்தனா். இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன் சிமாதேவி நள்ளிரவு காணாமல் போயுள்ளாா்.
இது குறித்து கோத்தகிரி காவல் நிலையத்தில் ஜெகதீஷ்குரா புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சிமாதேவியைத் தேடி வந்தனா்.
இந்நிலையில், மாமரம் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்குச் சென்று போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். இதில், உயிரிழந்தது சிமாதேவி என்பது தெரியவந்தது.
இதையடுத்து, சடலத்தை மீட்ட போலீஸாா் கூறாய்வுக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
சிமாதேவி கொலை செய்யப்பட்டாரா அல்லது வன விலங்கு தாக்கி உயிரிழந்தாரா என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
உயிழப்புக்கான காரணம் தெரியாத நிலையில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உடற்கூறாய்வு அறிக்கை வந்தவுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா தெரிவித்தாா்.