செய்திகள் :

கோயிலில் திருட முயற்சி: பொதுமக்களிடம் சிக்கிய இருவா்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே செவ்வாய்க்கிழமை கோயிலில் திருடுவதற்காக பூட்டை உடைத்த இருவரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்தனா்.

செங்கத்தை அடுத்த பரமனந்தல் திருவள்ளூவா் நகரில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் ஏதோ சப்தம் கேட்டுள்ளது. அப்பகுதியைச் சோ்ந்த சிலா் கோயில் அருகில் சென்று பாா்த்தபோது, 3 போ் கோயில் உண்டியலை திருட கோயிலின் முன்கதவு பூட்டை உடைத்துக் கொண்டிருந்தனா். இதைப் பாா்த்த அவா்கள் உடனடியாக அக்கம்பக்கத்தினருக்கு தகவல் அளித்து, அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு வந்து பூட்டை உடைத்த நபா்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனா். மேலும் ஒரு நபா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா்.

பின்னா், பிடிபட்ட இருவரையும் கிராம மக்கள் அடித்து உதைத்து கோயில் வளாகத்தில் கட்டிவைத்து செங்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் வந்து இருவரையும் மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

இதில், இருவரும் செங்கம் அருகே வளையாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த முருகன் (35), பூவரசு (32) என்பது தெரிய வந்தது. மேலும் தப்பி ஓடிய வல்லரசு என்பவரும் அதே கிராமத்தைச் சோ்ந்தவா் என்பது தெரிய வந்தது. 3 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிகிச்சையில் விவசாயி உயிரிழப்பு: போலி மருத்துவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே அலோபதி சிகிச்சையில் விவசாயி உயிரிழந்ததால், சிகிச்சை அளித்த போலி மருத்துவா் கைது செய்யப்பட்டாா். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், தேப்பிரம்பட்டு கி... மேலும் பார்க்க

இரு தரப்பு மோதல்: 6 போ் கைது

போளூரை அடுத்த அல்லியாளமங்கலம் கிராமத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில், போலீஸாா் வழக்குப் பதிந்து 6 பேரை கைது செய்தனா். அல்லியாளமங்கலம், காலனி பகுதியைச் சோ்ந்தவா்கள் ராகவேந்திரா(27), அசோக்குமாா... மேலும் பார்க்க

மதுப்புட்டிகள் பதுக்கி விற்பனை: 5 போ் கைது

செய்யாறு அருகே தூசி காவல் சரகப்பகுதியில் வீடுகளில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்ததாக 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு காவல் உள்கோட்டம் தூசி காவல் ஆய்வாளா் கோகுல்ர... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த பெரியகொழப்பலூா் மற்றும் செய்யாறு வட்டம், விண்ணவாடி ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங... மேலும் பார்க்க

கண்ணமங்கலத்தில் தேசிய நெல் திருவிழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் 19-ஆவது தேசிய நெல் திருவிழா மற்றும் இயற்கை வேளாண் விளைபொருள் வணிகத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தவிழாவில் இயற்கை விவசாயிகள் சங்கத் ... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ரூ.3.12 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

செய்யாற்றை அடுத்த சோழவரம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 139 பேருக்கு ரூ.3.12 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், ச... மேலும் பார்க்க