கோவாவில் ராட்சத அலையில் சிக்கிய ரஷியாவைச் சேர்ந்த 4 பேர் மீட்பு
கோவாவில் ராட்சத அலையில் சிக்கிய ரஷியாவைச் சேர்ந்த 4 பேர் பத்திரமாக மீட்டகப்பட்டனர்.
வடக்கு கோவாவில் உள்ள மேன்டிரம் கடற்கரையில் ரஷிய நாட்டினர் வியாழக்கிழமை பிற்பகல் குளித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென எழும்பிய ராட்சத அலையில் அவர்கள் சிக்கிக்கொண்டனர்.
இதனைக்கண்ட உயிர்காப்பு அமைப்பினர்(மாநில அரசால் நியமிக்கப்பட்ட) உடனே கடலில் குதித்து ராட்சத அலையில் சிக்கிய 3 பெண்கள் உள்பட 4 பேரை பத்திரமாக மீட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
மணிப்பூர்: ஆயுதங்களை ஒப்படைக்க காலக்கெடு நீட்டிப்பு!
சுற்றுலா தளமான கோவாவுக்கு நாள்தோறும் ஏராளமான வெளிநாட்டினர் சுற்றுலா வந்தது செல்வது வழக்கம் ஆகும்.