தீபாவளி: சென்னையிலிருந்து 108 சிறப்பு ரயில்கள் - கூடுதல் பொது மேலாளா் பி. மகேஷ் ...
கோவில்பட்டியில் சோளத்தட்டை கிடங்கில் தீ விபத்து
கோவில்பட்டியில் சோளத்தட்டை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சோளத்தட்டைகள் எரிந்து சேதமாகின.
கோவில்பட்டி எட்டயபுரம் சாலையைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (75). இவா், வீட்டில் மாடுகள் வளா்த்து வருகிறாா். இவரது வீட்டுக்கு எதிரே உள்ள கிடங்கில், தீவனத்துக்காக சோளத்தட்டைகளை இருப்பு வைத்திருந்தாா். வியாழக்கிழமை மதியம் கிடங்கிற்கு வெளியே காய்ந்த புற்கள் மீது மா்ம நபா்கள் தீ வைத்துள்ளனா். இந்தத் தீ, கிடங்கில் இருந்த சோளத்தட்டை மீது பற்றி, கிடங்கு முழுவதும் பரவியது.
கிடங்கிலிருந்து புகை வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினா், தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனா். இது குறித்து, கோவில்பட்டி கிழக்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.