செய்திகள் :

சக்தித் திருமகன் படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம்!

post image

நடிகர் விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

அண்மையில் வெளியான மார்கன் படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து, பிச்சைக்காரன் படத்தின் 3-ஆம் பாகத்தை இயக்கி, நடிக்க உள்ளதாக விஜய் ஆண்டனி தெரிவித்தார்.

இதனிடையே, விஜய் ஆண்டனியின் 25-வது படமாக உருவாகியுள்ள சக்தித் திருமகன் படத்தை, விஜய் ஆண்டனி தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்குகிறார்.

அரசியல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், விஜய் ஆண்டனி கேங்ஸ்டராக நடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இப்படத்தின் டீசர், 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

சக்தித் திருமகன் படம் வரும் செப்டம்பர் 5 ஆம் திரைக்கு வரவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது செப். 19 ஆம் வெளியாகும் என்று விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார்.

இது தொடர்பான புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க: தமிழக ஆளுநரிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு!

The release date of actor Vijay Antony's film Sakthi Thirumagan has been changed.

வெளியீட்டுக்கு முன்பே ரூ.100 கோடி வசூலித்த கூலி!

கூலி திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 14) வெளியாகவு... மேலும் பார்க்க

மோகன்லால் படத்தில் பூவே உனக்காக சங்கீதா..! ரிலீஸ் எப்போது?

மோகன்லாலின் ஹிருதயப்பூர்வம் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான், துடரும் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் சத்யன... மேலும் பார்க்க

பாடகர் பாட்ஷாவின் கேளிக்கை விடுதி மீது தாக்குதல்: ஒருவர் கைது!

சண்டிகரில் பிரபல ராப் பாடகர் பாட்ஷாவின் கேளிக்கை விடுதியின் மீதான வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் தொடர்புடைய ஒருவரை தில்லி சிறப்புப் பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சண்டிகரில் பிரபல ராப் பாடகர... மேலும் பார்க்க

கூலி: நாகார்ஜுனாவின் லிரிக்கல் விடியோ!

கூலி படத்தில் நடிகர் நாகார்ஜுனாவின் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் நாளை (ஆக. 14) வெளியாக இருப்பதால் படத்தின் மீதா... மேலும் பார்க்க

ரெடியா? 5,000 திரைகளில் வெளியாகும் கூலி!

கூலி திரைப்படம் வெளியாகும் திரைகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 14) வெளியாகவுள்ளதால் படத்தின் மீதான... மேலும் பார்க்க