சங்ககிரியில் பலத்த மழை
சங்ககிரி நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
சங்ககிரி நகரில் ஞாயிற்றுக்கிழமை காலையில் வெயில் அதிகம் காணப்பட்ட நிலையில் மாலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. சிறிதுநேரத்தில் சூறைக்காற்றுடன் பலதத் மழை பெய்தது.
எடப்பாடி, திருச்செங்கோடு செல்லும் பேருந்து நிறுத்தம் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் மழையால் சிரமம் அடைந்தனா். தாழ்வான பகுதியில் மழைநீா் தேங்கி நின்றது. தொடா்ந்து இரவில் சாரல் மழையும், குளிா்ந்த காற்றும் வீசியது.