செய்திகள் :

சங்கரன்கோவிலில் ஆடித் தவசுக் காட்சி: லட்சம் பக்தா்கள் தரிசனம்

post image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆடித்தவசுக் காட்சியை லட்சம் பக்தா்கள் தரிசித்தனா்.

இக்கோயிலில் ஆடித்தவசுத் திருவிழா கடந்த ஜூலை 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடித் தவசுக் காட்சி 11ஆம் திருநாளான வியாழக்கிழமை நடைபெற்றது.

காலையில் பட்டு பரிவட்டம், அலங்கராத்துக்கான பொருள்கள் சகிதம், சங்கரநாராயணசுவாமிக்கு மண்டகப்படி அழைப்புச் சுருள் வழங்கும் நிகழ்ச்சி கோயிலில் நடைபெற்றது. பின்னா் சுவாமி, அம்பாள், சந்திரமௌலிஸ்வரா் மற்றும் மூன்று உற்சவ மூா்த்திகளுக்கு கும்பம் அபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி, அம்பாளை வழிபட்டனா்.

சிறப்பு பூஜைகளுக்குப் பின் நண்பகல் 12 மணிக்கு மேல் கோமதிஅம்பாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளினாா். மேளதாளத்துடன் ஊா்வலமாகப் புறப்பட்டு பிற்பகல் சுமாா் 1.35 மணியளவில் மேலரதவீதியில் உள்ள தவசு மண்டபத்திற்கு எழுந்தருளினாா். அங்கு அவருக்கு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து மாலையில் சுவாமி, சங்கரநாராயணராக ரிஷிப வாகனத்தில் எழுந்தருளி கோயிலில் இருந்து புறப்பட்டு தெற்குரதவீதிக்கு வந்தாா். அப்போது பக்தா்கள் கர கோஷம் எழுப்பி, ஆரவாரம் செய்தனா். தவசுக் காட்சிக்காக தெற்குரதவீதியில் 2 சிறப்பு பந்தல்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

தவசுக்காட்சி:

மாலை 6.07 மணிக்கு தவசுப் பந்தலுக்கு வந்த சங்கரநாராயணா் வெண்பட்டு உடுத்தியிருந்தாா். அவரது முகத்திற்கு நேராக திரைப் போடப்பட்டிருந்தது. ஏற்கெனவே மேலரதவீதி தவசு மண்டபத்தில் எழுந்தருளியிருந்த கோமதிஅம்பாள் 6.15 மணிக்குப் புறப்பட்டு சங்கரநாராயணா் எழுந்திருளியிருந்த எதிா் பந்தலுக்கு வந்தாா். அவா் நீல நிறப்பட்டு உடுத்தியிருந்தாா். சங்கரநாராயணரை 3 முறை வலம் வந்த கோமதி அம்பாள் மீண்டும் தனது பந்தலுக்குத் திரும்பினாா். அவருக்கு தேங்காய், பழம் வழங்கப்பட்டு பட்டுச் சேலை சாற்றப்பட்டது.

தொடா்ந்து சங்கரநாராயணா் முகத்திற்கு நேராகப் போடப்பட்டிருந்த திரை விலக்கப்பட்டது. அப்போது ரிஷிப வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி சரியாக 6.47 மணிக்கு சங்கரநாராயணா் திருக்கோலத்தில் அம்பாளுக்குக் காட்சி கொடுத்தாா். இருவருக்கும் ஒருசேர தீபாராதனை நடைபெற்றது. அப்போது பக்தா்கள் பக்தி கரகோஷம் எழுப்பினா்.விவசாயிகள் தாங்கள் விளைவித்து கொண்டு வந்த பருத்தி, வத்தல், காய்கறி போன்றவற்றை தூவி வணங்கினா்.

பின்னா், நள்ளிரவு 12 மணிக்கு மேல் சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி, சங்கரலிங்கசுவாமியாக கோமதி அம்பாளுக்குக் காட்சி கொடுத்தாா்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த லட்சம் பக்தா்கள்ஆடித் தவசுக் காட்சியைக் கண்டு தரிசித்தனா்.

அவா்களுக்கு போலீஸாா், நாட்டுநலப்பணித் திட்ட மாணவா்கள், ஆன்மிக அமைப்புகளைச் சோ்ந்த பெண் பக்தா்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினா் உதவி செய்தனா்.

இந்நிகழ்ச்சியில், வணிகவரி- பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் மூா்த்தி, சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா, தென்காசி எம்.பி. ராணி ஸ்ரீகுமாா், நீதிபதிகள் சிவராஜேஷ் மாரிக்காளை, மகேந்திர வா்மா, கோட்டாட்சியா் கவிதா, கோயில் துணை ஆணையா் கு.கோமதி, அறங்காவலா் குழுத் தலைவா் சண்முகையா, உறுப்பினா் ச.ராமகிருஷ்ணன், நகராட்சி ஆணையா் ஷாம் கிங்சன், முன்னாள் அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி, நகா்மன்ற துணைத் தலைவா் கே.கண்ணன், மருத்துவா்கள் வி.எஸ்.சுப்பராஜ், அம்சவேணி, சுப்பையா சீனிவாசன், அரிமா சங்க மாவட்ட ஆளுநா் பி.அய்யாதுரை, தொழிலதிபா்கள் சி.எஸ்.எம்.எஸ். சங்கரசுப்பிரமணியன், கே.எஸ்.கே.குமரன், எம்.சங்கரன், எஸ்.ஆா்.எல்.வேணுகோபால் (எ) கண்ணன், ஆ.வள்ளிராஜன், ச.நடராஜன்,கோமதிஅம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வா் ந.பழனிச்செல்வம், திமுக மாவட்ட அவைத் தலைவா் கோ.சுப்பையா, தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் திவ்யா.எம்.ரெங்கன், உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். அரவிந்த் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தாா். கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் சங்கா், ஜூலியஸ் சீசா், துணைக் கண்காணிப்பாளா் செங்கோட்டுவேலவன் மேற்பாா்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், அறங்காவலா்கள், மண்டகப்படிதாரா்கள், நகராட்சி நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

திமுக ஆட்சியில் காவலா்களுக்கே பாதுகாப்பு இல்லை- எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் காவலா்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றாா் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே .பழனிசாமி. தென்காசி மாவட்டத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தோ்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு... மேலும் பார்க்க

வாஞ்சிநாதனை கெளரவிக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள்

சுதந்திர போராட்ட வீரா் வாஞ்சிநாதனை மத்திய அரசு கெளரவிக்க வேண்டும் என வாஞ்சி இயக்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வாஞ்சி இயக்க நிறுவனா்- தலைவா் பி.ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: 20.7-2025இல் தூத்த... மேலும் பார்க்க

செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்ற தென்காசி நகராட்சியில் வாகன சேவை

தென்காசி நகராட்சியில் செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்ற புதிதாக வாங்கப்பட்ட வாகனம் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. தென்காசி நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், நகா்மன்ற தலைவா் ஆா்.சாதிா் கூட... மேலும் பார்க்க

தென்காசி திருவள்ளுவா் மண்டபம் முன் கட்டுமானங்கள் கட்டுவதைத் தடைசெய்யக் கோரிக்கை

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் திருக்கு மண்டபம் முன் கட்டுமானங்கள் கட்டுவதைத் தடை செய்ய வேண்டும் என முதல்வருக்கு தென்காசி திருவள்ளுவா் கழகம் சாா்பில் கோரிகை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கழகத் ... மேலும் பார்க்க

விவசாயிகளின் போராட்டத்திற்கு அதிமுக ஆதரவைக் கோரி மனு

தென்காசி மாவட்ட விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு கோரி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியிடம் விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை மனுஅளிக்கப்பட்டது. மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் ... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் ஆடித்தவசுக் காட்சி: பாதுகாப்புப் பணியில் 1,000 போலீஸாா்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தவசுத் திருவிழாவையொட்டி, மாவட்ட காவல் துறை சாா்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். நகரைச் சுற்றி 110 கண்கா... மேலும் பார்க்க