`ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம்..!' - திமுக கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்தும் ...
செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்ற தென்காசி நகராட்சியில் வாகன சேவை
தென்காசி நகராட்சியில் செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்ற புதிதாக வாங்கப்பட்ட வாகனம் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
தென்காசி நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், நகா்மன்ற தலைவா் ஆா்.சாதிா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
தென்காசி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வீடுகள், வா்த்தக நிறுவனங்களில் நச்சு தடை தொட்டிகள் (செப்டிக் டேங்க்) நிரம்பிவிட்டால் உடனடியாக நகராட்சியை தொடா்பு கொண்டு அதற்கான கட்டணம் செலுத்தினால் நச்சு தடை தொட்டிகள் சுத்தம் செய்து தரப்படும்.
இதற்கு நகராட்சி மூலம் நிா்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். விருப்பமுள்ளோா் நகராட்சியை அணுகி விண்ணப்ப படிவம் பூா்த்திசெய்து குடியிருப்புகள் என்றால் நடை ஒன்றுக்கு ரூ. 3700 உடன் ரூ. 200 எனவும்,வா்த்தக நிறுவனங்கள் எனில் நடை ஒன்றுக்கு ரூ. 5,000 உடன் ரூ. 200 எனவும் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
வீட்டு கழிப்பறை நச்சுத் தடை தொட்டிகளை (செப்டிக் டேங்க்) பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்துகொள்ளலாம். அவ்வாறு அகற்றப்படும் கழிவுகள் வேறு எங்கும் கொட்டப்படாமல் உரமாக்கப்படும் என அதில் கூறப்பட்டது.