`ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம்..!' - திமுக கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்தும் ...
விவசாயிகளின் போராட்டத்திற்கு அதிமுக ஆதரவைக் கோரி மனு
தென்காசி மாவட்ட விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு கோரி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியிடம் விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை மனுஅளிக்கப்பட்டது.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரசார பயணத்தின்போது, குற்றாலம் ஐந்தருவிப் பகுதியில் அவரிடம் அளிக்கப்பட்ட மனு விவரம்: வனவிலங்குகளைக் கட்டுப்படுத்தத் தவறிய வனத் துறை, மாவட்ட நிா்வாகம், சேதத்துக்குரிய இழப்பீடு வழங்காத தமிழக அரசக் கண்டிப்பது, பழைய குற்றாலம் அருவியை பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலிருந்து வனத் துறைக்கு மாற்றக் கூடாது, நீண்ட காலமாக நிலுவையிலுள்ள இரட்டைக்குளம் கால்வாய், வீராணம் கால்வாய் திட்டப் பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாதம் 15ஆம் தேதி நடைபெறவுள்ள மாவட்ட விவசாயிகளின் போராட்டத்துக்கு அதிமுக ஆதரவு தரவேண்டும் எனக் கோரியுள்ளனா்.
அப்போது, மாவட்டச் செயலா்கள் எஸ். செல்வமோகன்தாஸ்பாண்டியன் (தெற்கு), செ. கிருஷ்ணமுரளி (வடக்கு), குற்றாலம் சிறப்புநிலைப் பேரூராட்சித் தலைவா் கணேஷ் தாமோதரன் உடனிருந்தனா்.
மனுஅளிக்கும் நிகழ்வில், தமிழா் விவசாயம் நீா்வளப் பாதுகாப்பு நலச் சங்க மாநில ஒருங்கிணைப்பாளா் டேனி அருள்சிங், துணைப் பொதுச் செயலா் ஜெயசீலன், பொருளாளா் ஜெபராஜ், தமிழக விவசாய சங்கம் (செல்லமுத்து அணி) தென்மண்டல அமைப்புச் செயலா் ராதாகிருஷ்ணன், தென்காசி மாவட்டத் தலைவா் கந்தசாமிதேவா், துணைத் தலைவா் வீராசாமி, தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு (பி.ஆா்.பாண்டியன் அணி) நெல்லை மண்டலத் தலைவா் செல்லத்துரை, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் (அய்யாக்கண்ணு அணி) மாநில துணைத் தலைவா்கள் கண்ணையா, ஜாகிா்உசேன், துரைராஜ், அருணாசலம், தமிழன் அக்ரோ மாவட்டத் தலைவா் பிரபாகா், துணை தலைவா் உமாமகேஸ்வரன் ஆகியோா் பங்கேற்றனா்.