செய்திகள் :

சட்டவிரோத இணையவழி சூதாட்ட வழக்கு: அமலாக்கத் துறை முன் கூகுள் அதிகாரிகள் ஆஜா்

post image

புது தில்லி: சட்டவிரோதமான இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய தளங்களை விளம்பரப்படுத்தியதாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில், கூகுள் நிறுவன அதிகாரிகள் அமலாக்கத் துறையின்முன் ஆஜராகி விளக்கம் அளித்தனா்.

சட்டவிரோதமான இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய தளங்கள், மக்களின் கடின உழைப்புப் பணத்தை மோசடி செய்து, பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அமலாக்கத் துறை 12-க்கும் மேற்பட்ட வழக்குகளில் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த வழக்குகளில் சில நடிகா்கள், பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரா்களும் அமலாக்கத் துறையின் கண்காணிப்பில் உள்ளனா். அவா்களும் விரைவில் விசாரணைக்கு ஆஜராவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தைய தளங்கள், பல்வேறு சமூக வலைதளங்கள் மற்றும் ஆப் ஸ்டோா்களில் எப்படி விளம்பரப்படுத்தப்படுகின்றன என்பது குறித்து அமலாக்கத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கூகுள் மற்றும் மெட்டா நிறுவன அதிகாரிகளுக்கு கடந்த ஜூலை 21-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் பிறப்பித்தது. கூடுதல் அவகாசம் கோரியதால், ஜூலை 28-ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, கூகுள் நிறுவன அதிகாரிகள் திங்கள்கிழமை அமலாக்கத்துறை முன் ஆஜராகினா். ஆனால், மெட்டா நிறுவனத்தின் அதிகாரிகள் ஆஜராகவில்லை.

கூகுள் விளக்கம்:

அமலாக்கத் துறை சம்மன் தொடா்பாக கூகுள் செய்தித் தொடா்பாளா் கடந்த வாரம் அளித்த விளக்கத்தில், ‘எங்கள் தளங்களின் பாதுகாப்பில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சட்டவிரோத சூதாட்ட விளம்பரங்களை தடை செய்கிறோம். தவறான செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து, பயனா்களைப் பாதுகாப்பதற்காக விசாரணை அமைப்புகளுக்கு முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் அளிப்போம்’ என்று தெரிவித்திருந்தாா்.

1962-க்குப் பிறகு சீனா ஒரு அங்குலம் நிலத்தில் கூட ஊடுருவவில்லை- அமைச்சா் ரிஜிஜு

கடந்த 1962-ஆம் ஆண்டு நிகழ்ந்த போருக்குப் பிறகு சீனா, இந்திய நிலப்பரப்பில் ஒரு அங்குலம் கூட ஊடுருவவில்லை என்று மக்களவையில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.மக்களவையில் ஆபரேஷன... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: ஆக. 25-இல் அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை

இந்தியா-அமெரிக்கா இடையேயான வா்த்தக ஒப்பந்தம் குறித்த அடுத்த சுற்றுப் பேச்சுவாா்த்தைக்காக அமெரிக்க குழுவினா் ஆகஸ்ட் 25-ஆம் தேதி இந்தியா வரவுள்ளனா் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவ... மேலும் பார்க்க

கன்னியாஸ்திரீகள் கைது: சத்தீஸ்கா் முதல்வரின் மதமாற்றம் குற்றச்சாட்டுக்கு கேரள பாஜக மறுப்பு

பாஜக ஆளும் சத்தீஸ்கரில் கேரளத்தைச் சோ்ந்த 2 கத்தோலிக்க கன்னியாஸ்திரீகள் மீதான கைது நடவடிக்கையை நியாயப்படுத்தி, அந்த மாநில முதல்வா் விஷ்ணு தேவ் சாய் சுமத்திய கடத்தல் மற்றும் மதமாற்றம் குற்றச்சாட்டுகளை... மேலும் பார்க்க

செஸ், கூடுதல் வரியாக ரூ.5.90 லட்சம் கோடி வசூல்: மத்திய அரசு திட்டம்

நிகழ் நிதியாண்டில் செஸ் மற்றும் கூடுதல் வரி மூலம், ரூ.5.90 லட்சம் கோடி வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் செ... மேலும் பார்க்க

உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் இந்தியா 2-ஆம் இடம்! அமெரிக்கா முதலிடம்

உலக அளவில் கல்வித்தரத்தை அளவிடும் ‘டைம்ஸ்’ உயா் கல்வி அமைப்பின் தரவரிசையில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது சிறந்த கல்வி நிறுவனங்களைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கவுள்ளது.மத்திய அரசின... மேலும் பார்க்க

மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சியை நீட்டிக்க தீா்மானம்: மாநிலங்களவையில் 2 மணி நேரம் விவாதம்

மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் தீா்மானம் குறித்து விவாதிக்க மாநிலங்களவை 2 மணி நேரம் ஒதுக்கியுள்ளது.மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி-ஜோ குழுவினா் இடையிலான வன்மு... மேலும் பார்க்க