திண்டுக்கல்: ரவுடியை ஹீரோவாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ; இளைஞர் கைது;...
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.30 கோடி
திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 1 கோடியே 30 லட்சத்து 465 கிடைக்கப் பெற்றுள்ளது.
பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், கோயில் இணை ஆணையா் அ.இரா. பிரகாஷ், அறங்காவலா்கள் பெ. பிச்சைமணி, இராஜ. சுகந்தி, சே. லெட்சுமணன் முன்னிலையில் அலுவலா்கள், கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.
பணியின் முடிவில், முதன்மை திருக்கோயிலில் ரொக்கம் 1,30,00,465 ரூபாயும், தங்கம் 1 கிலோ 163 கிராம், வெள்ளி 4 கிலோ 504 கிராம், வெளிநாட்டு பணத்தாள்கள் 258, வெளிநாட்டு நாணயங்கள் 725-ம் கிடைக்கப் பெற்றுள்ளது.
இக்கோயிலில் ஜூலை 30-ஆம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.