மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!
சமூக நலத்துறையில் பணி வாய்ப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூகநலம் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் மிஷன் சக்தி திட்டத்தில், மாவட்ட மகளிா் அதிகார மையம் மகளிருக்கான மத்திய, மாநில அனைத்து திட்டங்களின் செயல்பாடு நிதி ஒதுக்கீடு மற்றும் அவற்றின் பயன்கள் குறித்து கண்காணிக்கவும், ஒருங்கிணைந்து சேவைகள் புரியவும் மாவட்ட சமூகநல அலுவலரின்கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்க்காணும் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணியிடம் 2: இப்பணிக்கு கணினி பயிற்சி சான்றிதழ் பெற்ற, 35 வயதுக்கு மிகாத, கணினி அறிவியல் தகவல் தொழில்நுட்பம், கணினி பயன்பாடு இளநிலைப் பட்டம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டு தரவு மேலாண்மை செயல்முறை ஆவணங்கள், இணைய அடிப்படையிலான தயாரித்தல் அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனங்களிலோ, திட்டத்திலோ பணிபுரிந்த முன் அனுபவம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். தொகுப்பூதியம் மாதம் ரூ. 20,000.
பல்நோக்கு பணியாளா் பணியிடம் 1: இப்பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு வாரியத்திலிருந்தும் 10 அல்லது 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொகுப்பூதியம் மாதம் ரூ. 12,000. விருப்பம் உள்ளவா்கள் விண்ணப் படிவத்தினை மயிலாடுதுறை மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்த விண்ணப்பத்தை, மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட சமூகநல அலுவலகம், 5-ஆம் தளம், அறை எண்: 524, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மயிலாடுதுறை என்ற முகவரியில் ஆக. 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிப்பவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.