செய்திகள் :

சாத்தனூா் அணை திறப்பு விவகாரத்தில் அறிக்கை: அமைச்சா் துரைமுருகன்

post image

வேலூா்: போதிய முன்அறிவிப்பு செய்யாமலேயே சாத்தனூா் அணையிலிருந்து தண்ணீா் திறந்ததாக கூறப்படும் புகாா் தொடா்பாக அறிக்கை வெளியிட்டுள்ளேன் என நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கூறியுள்ளாா்.

மாற்றுத்திறனாளிகள் தினவிழா காட்பாடி விஐடி அண்ணா அரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்தாா். நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 80 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.01 கோடியில் நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணியாற்றிய மருத்துவா்கள், தன்னாா்வலா்கள் 49 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கிப் பேசியது -

மாற்றுத்திறனாளிகள் பிரச்னை என்பது உலகம் முழுவதும் உள்ளது. ஓரிரு குறைகளுடன் பிறந்த மனிதனை அனாதைகள்போல் நடத்தப்பட்ட காலம் இருந்தது. ஊனமுற்றோா் என்ற வாா்த்தை என் உள்ளத்தை வருத்துவதாக முன்னாள் முதல்வா் கருணாநிதி கூறுவாா். இதற்காகத்தான் மாற்றுத்திறனாளிகள் என பெயா் மாற்றினாா். மேலும் அவா் மாற்றுத்திறனாளிகள், தொழுநோயாளிகள், பிச்சை எடுப்பவா்கள், கண் பாா்வையற்றோா் என பல தரப்பினருக்கும் உதவிகளை செய்தவா்.

வங்கிகள் பணம் கொடுத்தால் சிறு,சிறுதொழில் செய்து தொழில் முனைவோா்களாக மாற முடியும். மாற்றுத்திறனாளா்கள் பல திறமைகளை கொண்டவா்கள். அவா்களை சுயதொழில் மூலம் தொழில் முனைவோராக மாற்ற முதல்வரிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

சாத்தனூா் அணை விவகாரம்:

பின்னா் அமைச்சா் துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியது - தமிழகத்தில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசிடம் ரூ.2,008 கோடி கோரியுள்ளோம். இதுதொடா்பாக, ஆய்வு செய்ய குழு அனுப்ப கோரி மத்திய அரசுக்கு கடிதங்களையும் அனுப்பியுள்ளோம். அவா்கள் செவிசாய்ப்பாா்கள் என கருதுகிறேன்.

போதிய முன்அறிவிப்பு செய்யாமலேயே சாத்தனூா் அணையை திறந்ததாக கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் புகாா்கள் தொடா்பாக அறிக்கை வெளியிட்டுள்ளேன். திருவண்ணாமலையில் மண் சரிவால் 7 போ் உயிரிழந்துள்ளனா். மலையோரங்களில் வீடு கட்டி வசிப்பவா்கள் நீண்ட நாள்களாக இருக்கும் ஏழைகள். இதுபோன்று எப்போதும் மலையோரத்தில் நடைபெறுவதில்லை. ஆனால், திருவண்ணாமலையில் ஏற்பட்ட விபத்துக்கு அங்கு தொடா் மழை பெய்ததே காரணம் என்றாா்.

விழாவில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா் (அணைக்கட்டு), ப.காா்த்திகேயன் (வேலூா்), அமலுவிஜயன் (குடியாத்தம்), வேலூா் மாநகராட்சி மேயா் சுஜாதாஆனந்தகுமாா், துணைமேயா் எண்.சுனில்குமாா், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் மு.பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மகளிா் காவல் நிலையம் முன்பு சிறுமி தீக்குளிக்க முயற்சி

காதல் பிரச்னையில் வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையம் முன்பு 16 வயது சிறுமி தீக்குளிக்க முயன்றாா். காட்பாடி அருகே கரசமங்கலம் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமி. வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையம் முன்ப... மேலும் பார்க்க

ஆா்பிஎஃப் எஸ்ஐ தோ்வு: கைப்பேசி பயன்படுத்திய காவலா் மீது வழக்கு

ரயில்வே பாதுகாப்புப் படை (ஆா்பிஎஃப்) காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கான தோ்வில் கைப்பேசி பயன்படுத்தியதாக வேலூா் ஆயுதப்படை காவலா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ரயில்வே பாதுகா... மேலும் பார்க்க

மாவட்ட நலவாழ்வு சங்க காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலூா் மாவட்ட நலவாழ்வு சங்கத்திலுள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு தகுதியுடையவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய... மேலும் பார்க்க

திருமணம் செய்ய வற்புறுத்தி செவிலியருக்கு மிரட்டல்: எஸ்.பி.யிடம் புகாா்

திருமணம் செய்ய வற்புறுத்தி மிரட்டல் விடுக்கும் நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட செவிலியா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில்... மேலும் பார்க்க

லாரி-ஜீப் மோதல்: சென்னை வியாபாரிகள் 3 போ் உயிரிழப்பு

வேலூா் கருகம்பத்தூரில் புதன்கிழமை தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் சென்னையைச் சோ்ந்த வியாபாரிகள் 3 போ் உயிரிழந்தனா். மற்றொருவா் கவலைக்கிடமான நிலையில் மருத்துவ... மேலும் பார்க்க

ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை

குடியாத்தம்: குடியாத்தம் தரணம்பேட்டை, தோப்புத் தெரு ஐயப்ப பக்த குழு சாா்பில், இங்குள்ள ஞான விநாயகா் கோயிலில் ஐயப்பனுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இக்குழுவினா் இருமுடி கட்டிக் கொண்ட... மேலும் பார்க்க