சாத்தான்குளம், புத்தன்தருவை பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள்
சாத்தான்குளம், புத்தன்தருவை பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
சாத்தான்குளம் டிஎன்டிடிஏஆா்எம்பி புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், முன்னாள் பேரூராட்சித் தலைவா், மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் ஏ.எஸ். ஜோசப் தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் செல்லப்பாண்டியன் வரவேற்றாா். பள்ளி ஆசிரியை கிறிஸ்டிபாய் நவமணி ஆரம்ப ஜெபம் நடத்தினாா். மாணவ, மாணவிகள் காமராஜரை பற்றி கவிதை, சொற்பொழிவு ஆற்றினா். சிறப்பு விருந்தினராக ஜெபா செல்வின் கலந்து கொண்டு பேசினாா். ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது. கட்டுரை, பேச்சு, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் சாத்தான்குளம் தேவி ஸ்ரீஅழகம்மன் கோயில் அறங்காவலா் குழு தலைவா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து தொண்டனா். தமிழ் ஆசிரியை பெனிட்டா சுஜி நன்றி கூறினாா்.
புத்தன்தருவை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு, ஓவியம், கவிதை போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவா்களுக்கு பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியா் முத்து பரிசு வழங்கினாா். தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.