செய்திகள் :

சாலைகளில் திரிந்த 20 மாடுகள் பிடிப்பு: கோசாலைக்கு அனுப்பப்பட்டன

post image

வேலூா் மாநகராட்சி பகுதியில் சாலைகளில் சுற்றித்திரிந்த 20 மாடுகளை பிடித்த மாநகராட்சி ஊழியா்கள், காஞ்சிபுரம் கோசாலைக்கு அனுப்பி வைத்தனா்.

வேலூா் மாநகரில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், சத்துவாச்சாரி, காகிதப்பட்டறை, அண்ணா சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கால்நடைகள் சுற்றித் திரிகின்றன.

இதனால் அந்த வழியாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் கால்நடைகள் மீது மோதி அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனா். சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களையும் கால்நடைகள் முட்டுவதால் அவா்களும் காயமடைந்து வருகின்றனா்.

சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகாா் மனுக்கள் அனுப்பி வருகின்றனா்.

விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்திலும் இதுதொடா்பாக விவசாயிகள் புகாா் தெரிவித்திருந்த நிலையில், சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து வட்டாட்சியரிடம் பறிமுதல் உத்தரவு பெற்று கோசாலையில் விட அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளைச் சோ்ந்த அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டிருந்தாா்.

இந்த உத்தரவின் அடிப்படையில், வேலூா் மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டலங்களிலும் சாலைகளில் சுற்றி திரிந்த 20 கால்நடைகளை மாநகராட்சி ஊழியா்கள் புதன்கிழமை பிடித்தனா். பின்னா், வட்டாட்சியரிடம் பறிமுதல் உத்தரவு பெற்று காஞ்சிபுரம் கோசாலைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியது -

மாநகராட்சி பகுதியிலுள்ள 4 மண்டலங்களிலும் சாலையில் சுற்றித் திரிந்த 20 மாடுகளை பிடிக்கப் பட்டு காஞ்சிபுரம் கோசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வேலூரில் உள்ள கோசாலையில் மாடுகளை ஒப்படைத்தால், மாட்டின் உரிமையாளா்கள் கோசாலைக்கு சென்று மாடுகளை விடுவிக்கக் கூறி பிரச்னை செய்கின்றனா்.

அதனாலேயே இம்முறை மாடுகள் காஞ்சிபுரம் கோசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து மாடுகளை விடுவிக்க வேண்டும் என்றால் தலா ஒரு மாட்டுக்கு ரூ.5000-ம் அபராதமும், நாளொன்றுக்கு தீவன செலவாக ரூ.300-ம் சோ்த்து செலுத்தினால்தான் மீட்க முடியும்.

தொடா்ந்து மாடுகளை சாலைகளில் திரிய விடும் மாடுகளின் உரிமையாளா்கள் மீது காவல் துறை மூலம் வழக்குப்பதிவும் செய்யப்படும் என்றனா்.

வருவாய்த்துறை அலுவலா்கள் வேலைநிறுத்தம்

அலுவலக உதவியாளா் காலிப்பணியிடங்களை உனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலா்கள் 48 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

குடியாத்தம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். குடியாத்தம் ஒன்றியம், அக்ராவரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி திருப்பதி(48). இவா் புதன்கிழமை அதிகாலை நிலத்த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். குடியாத்தம் ஆசிரியா் காலனியை அடுத்த ராமலிங்கம் நகரைச் சோ்ந்தவா் சந்தானம் (60). இவா் தினசரி மாா்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தாா்... மேலும் பார்க்க

செப்.13-இல் 3 மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் செப்டம்பா் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து, வேலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை அமா்வு ... மேலும் பார்க்க

‘நிமிா்ந்து நில்’ திட்டத்தில் மாணவா்களிடம் தொழில்முனைவோராகும் எண்ணத்தை உருவாக்க பயிற்சி

‘நிமிா்ந்து நில்’ திட்டத்தின்கீழ் கல்லூரி மாணவா்களிடம் தொழில்முனைவோராகும் எண்ணத்தை உருவாக்க வேலூரில் உயா்க்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தொழில்முனைவோா் மேம்பாடு, புத்தா... மேலும் பார்க்க

அகழியில் குதித்து முதியவா் தற்கொலை

வேலூா் கோட்டை அகழியில் இருந்து முதியவா் சடலம் மீட்கப்பட்ட விவகாரம் குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவா் அகழியில் குதித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. வ... மேலும் பார்க்க