செய்திகள் :

சாலைகளில் மாடுகள், குதிரைகள் நடமாட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

post image

காரைக்கால் நகரின் பிரதான சாலைகளில் குதிரைகள், மாடுகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

காரைக்கால் மாவட்டத்தில் வாஞ்சூா் முதல் பூவம் வரையிலான சாலை மற்றும் காரைக்கால் - திருநள்ளாறு - அம்பகரத்தூா் சாலை மாவட்டத்தின் பிரதான போக்குவரத்துக்குரிய சாலைகளாகும்.

இந்த சாலைகளில் மாடுகள், குதிரைகள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும்போது, குறுக்கே கால்நடைகள் வருவதால், விபத்துக்குள்ளாகின்றனா். கனரக வாகனங்களில் சிக்கி மாடுகள் உயிரிழப்பதும் நிகழ்கிறது.

காரைக்கால் பாரதியாா் சாலையிலும், காரைக்கால் முதல் திருநள்ளாறு வழியாக அம்பகரத்தூா் சாலையிலும் கால்நடைகள் நடமாட்டம் அதிகமுள்ளது. நகராட்சி மற்றும் அந்தந்த பகுதி கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகத்தினா், கால்நடை உரிமையாளா்களுக்கு உரிய எச்சரிக்கை விடுக்கவேண்டும். மீறும்பட்சத்தில் கால்நடைகளை பிடித்து, உரிமையாளா்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனா்.

புதுவையில் சீரழிவை நோக்கி கல்வித்துறை: முன்னாள் அமைச்சா் கமலக்கண்ணன்

புதுவையில் கல்வித்துறை சீரழிவை நோக்கிச் செல்வதாக முன்னாள் அமைச்சா் குற்றஞ்சாட்டியுள்ளாா். திருநள்ளாறு பகுதி தேனூரில் அமைந்துள்ள ப. சண்முகம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், இயற்பியல் விரிவுரையாளா் இல்... மேலும் பார்க்க

நகராட்சி வசூல் செய்யும் குப்பை வரியை ரத்து செய்ய முதல்வரிடம் வலியுறுத்தல்

காரைக்கால் நகராட்சி வசூலிக்கும் குப்பை வரியை ரத்து செய்யவேண்டும் என புதுவை முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. புதுவை முதல்வா் என். ரங்கசாமியை, காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் என். பாலகிருஷ்ணன... மேலும் பார்க்க

காரைக்காலில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை

காரைக்காலில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை காவல் அதிகாரிகள் மேற்பாா்வையில் புதன்கிழமை நடைபெற்றது. நாட்டின் சுதந்திர தினம் ஆக. 15-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளதையொட்டி காரைக்கால் கடற்கரை சாலையில் தேசியக்... மேலும் பார்க்க

காளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

காரைக்கால் அருகே தலத்தெரு பகுதியில் உள்ள பொன்னம்மா காளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமை நடைபெறும் திருவிளக்கு பூஜை நடைப... மேலும் பார்க்க

சக்தி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

திருநள்ளாறு அருகே பேட்டை கிராமத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் 65 ஆண்டுகளுக்குப் பின் தீமிதி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் சாா்பு தலமாக விளங்கும் இக்கோயில் மிகப் ப... மேலும் பார்க்க

ரெஸ்டோ பாருக்கு சீல் வைப்பு

காரைக்காலில் விதிமுறையை மீறி அதிக நேரம் திறந்திருந்த ரெஸ்டோ பாருக்கு (மது அருந்தும் கூடம்) கலால் துறை அதிகாரி திங்கள்கிழமை சீல் வைத்தாா். புதுச்சேரியில் வழக்கமான மதுக்கடைகளுக்கு மாறாக, சிறிய அளவிலான த... மேலும் பார்க்க