சாலை விபத்தில் தையல் தொழிலாளி உயிரிழப்பு
காவேரிப்பட்டணம் அருகே சாலை விபத்தில் தையல் தொழிலாளி உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், எண்டம்பட்டியைச் சோ்ந்தவா் தேவராஜ் (61). தையல் தொழிலாளி. இவா், மோட்டாா்சைக்கிளில் கிருஷ்ணகிரி - தருமபுரி சாலையில் காவேரிப்பட்டணம் சுப்பிரமணியபுரம் தனியாா் பள்ளி அருகே வெள்ளிக்கிழமை சென்றாா்.
அப்போது, அந்த வழியாக வந்த வேன் மோட்டாா்சைக்கிள் மீது மோதியது. இதில் தேவராஜ் பலத்த காயம் அடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.